ராமருக்கு கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்.. விழாக்கோலத்தில் அயோத்தி!

Jan 21, 2024,06:54 PM IST

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டுத்துறையினர், திரைக் கலைஞர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் அயோத்தியில் குவிந்தவண்ணம் உள்ளனர்.


அயோத்தியில் நாளை ராமர் கோவில் திறப்பு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுமையாக முடிவடைந்து விட்டன. பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவில் முக்கிய விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் 11 நாட்கள் விரதம் இருந்து வருகிறார். இந்த விரதத்தின் முக்கிய அம்சமாக அவர் ராமேஸ்வரம் வந்து அனைத்துத் தீர்த்தங்களிலும் புனித நீராடி, புனித நீருடன் டெல்லி சென்றுள்ளார்.  நாளை இந்த புனித நீருடன் அவர் அயோத்திக்கு செல்கிறார்.




பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் கட்டுமானப் பணிகள் இன்னும் முடியவில்லை. இருப்பினும் நாளை ராமரின் சிலை பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. பால ராமரின் சிலை இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு கருவறையில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. இந்த விழாவைத்தான் நாடு முழுவதும் உள்ள ராம பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். இந்த நாள் நாளை வந்து விட்டது.


சமீபத்தில் ராமரின் சிலை குறித்த புகைப்படங்கள் வெளியாகி ராம பக்தர்களை உணர்ச்சி வசப்பட வைத்தது. கர்நாடகத்தைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் உருவாக்கிய சிலை இது. 51 இன்ச் உயரம் கொண்ட இந்த சிலையானது 1.5 டன் எடை கொண்டதாகும். 5 வயது ராமரின் உருவத்தை இது கொண்டுள்ளது. தாமரை மலர் மீது ராமர் நிற்பது போல இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லால் இதை செதுக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




நாளை நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று சடங்குகளைச் செய்யவுள்ளார். லட்சுமிகாந்த் தீக்ஷித் தலைமையிலான புரோகிதர்கள் குழுடன் இணைந்து அவர் இதை மேற்கொள்வார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்  வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்தும் துறவிகள் உள்பட பலர் இதற்காக அயோத்தி வந்தவண்ணம் உள்ளனர்.


இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினியின் அண்ணன் உள்ளிட்ட குடும்பத்தினர் அயோத்தி சென்றுள்ளனர். நடிகர் தனுஷும் அயோத்தி சென்றுள்ளார்.




இதேபோல இந்திப் பட நடிகர் நடிகைகள் பலரும் அயோத்தி சென்றுள்ளனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களும் இதுபோல அயோத்திக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கானோர் அயோத்தியில் குவிந்து வருவதால் நகரமே திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.


அயோத்தி ராமர் கோவிலும் விளக்கொளியில் ஜொலி ஜொலிக்கிறது. ஏற்பாடுகளும் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன. அயோத்தி விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்துமே சொர்க்கபுரி போல மாறிக் காணப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்