ராமர் கோவில் திறப்புக்காக.. "நான்வெஜ் டெலிவரி" கிடையாது.. கட் செய்த சொமேட்டோ.. வட இந்தியாவில்!

Jan 23, 2024,10:34 AM IST
டெல்லி: ராமர் கோவில் திறப்பையொட்டி நேற்று வட இந்திய மாநிலங்களில் அசைவ உணவு டெலவரியை சொமேட்டோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் அசைவு உணவுப் பிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆனால் அரசின் உத்தரவைப் பின்பற்றியே இவ்வாறு செய்ததாக சொமேட்டோ கூறியுள்ளது.

வட இந்தியாவின் பல மாநிலங்களிலும் அசைவ உணவு டெலிவரியை சொமேட்டோ  நிறுத்தியதால் அசைவ உணவுப் பிரியர்கள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். வட மாநிலங்கள் பலவற்றில் நேற்று இறைச்சிக் கடைகளும் கூட மூடப்பட்டிருந்தன. ஹோட்டல்களிலும் கூட அசைவ உணவுகள் பரிமாறப்படவில்ல என்பது குறிப்பிடத்தக்கது.

சொமேட்டோவில் அசைவ உணவு  கிடைக்காதது குறித்து பலரும் டிவிட்டர் தளத்தில் குமுறல் வெளியிட்டிருந்தனர். பலர் ஏன் அசைவ உணவு டெலிவரி இல்லை என்றும் சொமேட்டோ வை டேக் செய்து கேட்டிருந்தனர். அதற்கு சொமேட்டோ பதிலளிக்கையில், உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அசைவ உணவு டெலிவரியை ஒரு நாளைக்கு சஸ்பெண்ட் செய்துள்ளோம். அரசு உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம் என்று கூறியிருந்தது.



உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று இறைச்சிக் கடைகளையும் கூட அந்த மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. ஒரு கடை கூட திறந்திருக்கக் கூடாது என்று அந்த மாநில தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா உத்தரவே போட்டிருந்தார்.

தென்னிந்தியாவில் எந்தத் தடையும் இல்லை

இதேபோலத்தான் பாஜக ஆளும் பிற மாநிலங்களிலும் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் வட மாநிலங்களில் முழு நாள் அல்லது அரை நாள் விடுமுறை, இறைச்சிக் கடைகள் மூடல், சொமேட்டோவில் அசைவு உணவு கட், மதுக் கடைகள் மூடல் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் தென்னிந்தியாவில் இதுபோல எந்தத் தடையும் அமல்படுத்தப்படவில்லை, எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. வழக்கம் போல மக்களின் வாழ்க்கை இருந்தது. அதேசமயம், இங்கும் கூட மக்கள் தங்களது பக்தியில் யாருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தனர். வீடுகள் தோறும் ராமர் கோவில் திறப்பு விழாவை மக்கள் டிவியில் கண்டு களித்தனர். 

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ரங்கசாமி ஆட்சி நடந்து வரும் புதுச்சேரியில் மட்டுமே விடுமுறை விடப்பட்டிருந்தது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்