டில்லி : அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வெளியாகி, இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பலரும் உணர்ச்சி வசப்பட்டு, கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.
அயோத்தி ராமர் கோவில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட 6000 க்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர டிரஸ்ட் சார்பில் 6000 க்கும் அதிகமான அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு, நாடு முழுவதிலும் உள்ள விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அழைப்பிதழின் முதல் பக்கத்தில் "ஸ்ரீராம பிரான் தன்னுடைய உண்மையான இருப்பிடமான புதிய பிரம்மாண்ட கோவிலுக்கு திரும்பும் மங்களகரமான விழா"என அச்சிடப்பட்டுள்ளது. கோவில் திறப்பு விழா நடக்கும் இடம், தேதி, நேரம் ஆகியவற்றுடன் கண்ணை கவரும் விதமாக மிக அழகாக அச்சிடப்பட்டுள்ள இந்த அழைப்பிதழின் வீடியோக்கள் இணையத்தில் அதிகமானவர்களால் பகிரப்பட்டு வருகிறது.

பத்திரிக்கைகள் விநியோகம் செய்யும் பணி ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே இவ்விழாவில் கலந்த கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அழைப்பிதழின் ஃபர்ஸ்ட் லுக் எப்படி வெளியில் கசிந்தது என்றே தெரியவில்லை.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல உலகின்ற பல்வேறு நாடுகளின் பங்களிப்புடனேயே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து ராம்ஜென்ம பூமிக்கு தேவையான மண் கொண்டு வரப்பட்டதுடன், இரண்டு புனித நதிகளில் இருந்தும் புனிதநீர் கொண்டு வரப்பட்டுள்ளது.
ராமர் கோவில் திறப்பு விழாவை மாநிலம் முழுவதும் திருவிழா போல் கொண்டாட உத்திர பிரதேச மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஜனவரி 14ம் தேதி முதல் கோவில்கள், மடங்களில் ஆன்மிக நிகழ்வுகள் பலவற்றையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேச சுற்றுலா மற்றும் கலாச்சார துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}