லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.
நின்ற கோலத்தில் உள்ள பால ராமர் சிலை பார்க்கவே படு ஜோராக இருக்கிறது. சிலை பிரதிஷ்டை முடிந்ததும் முதல் பூஜையை பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார். இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி. ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். கோவில் திறப்பு விழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்ட அளவில் தயார் செய்யப்பட்டிருந்தது. மாலைகள், தோரணங்கள் என கோவில் வளாகம் முழுவதும் களைகட்டியிருந்தன.
உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டபட்டது. இக்கோவில் கட்டுவதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இன்று பால ராமர் சிலையையும் அவரே பிரதிஷ்டை செய்து சிறப்புப் பூஜைகளையும் நடத்தினார்.
7000த்திற்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினார்கள் இதில் கலந்து கொண்டனர். கோவில் கருவறையில் காலை 11.30 மணிக்கு பூஜைகள் தொடங்கின. 12.15 மணியில் இருந்து 12.45 மணிக்குள் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ராமர் பிரதிஷ்டை முடிந்தவுடன் பிரதமர், மற்றும் முக்கிய தலைவர்கள் உரை நிகழ்த்தவுள்ளனர். அதன் பின்னர் ராமரை வழிபட முக்கிய பிரமுகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 200 டன் மலர்களால் ராமர் கோவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவில் கருவறை தங்கத்தில் செய்யப்பட்ட மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு கோவில் முழுவதிலும் 10 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்கு ஏற்றப்பட உள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}