"நல்லது செய்கிறீர்கள்".. ராகுல் காந்திக்கு.. ராமர் கோவில் பூசாரி வாழ்த்து.. வி.எச்.பி. அதிருப்தி!

Jan 04, 2023,08:54 AM IST
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் பாரத ஒற்றுமை யாத்திரை தொடங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு, அயோத்தி ராமர் கோவில் பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் வாழ்த்து தெரிவித்திருப்பதற்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு அதிருப்தியும், ஏமாற்றமும் தெரிவித்துள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரை என்ற ஒற்றுமை யாத்திரையை ராகுல் காந்தி நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை டெல்லியை அடைந்ததும் புத்தாண்டையொட்டி இடைவெளி விட்டு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

உத்தரப் பிரதேசத்திலிருந்து யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த யாத்திரை தொடர்பாக பல்வேறு தலைவர்களுக்கும் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதேபோல அயோத்தி ராமர் கோவில் தலைமைப் பூசாரி ஆச்சார்யா சத்தியேந்திர தாஸுக்கும்  அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் யாத்திரைக்கு வரவில்லை. மாறாக, ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்.



இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கடிதத்தில் அரசியல் பார்க்கக் கூடாது. ராமரின் அருளும் ஆசிர்வாதமும் அனைவருக்கும் உண்டு என்று கூறியுள்ளார்.  முன்னதாக அவர் எழுதியிருந்த கடிதத்தில், உங்களது உடல் ஆரோக்கியமாக இருக்கட்டும். நீண்ட நெடிய வாழ்க்கை வாழ வேண்டும். நீங்கள் செய்யும் செயல் இந்த நாட்டுக்கு நல்லது விளைவிக்கட்டும். அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் நீங்கள் இதை மேற்கொண்டுள்ளீர்கள்.  ராமரின் அருள் உங்களுடன் எப்போதும் இருக்கும் என்று கூறியிருந்தார்.

கடந்த 1992ம் ஆண்டு மார்ச் முதல் ராமர் கோவில் தலைமைப் பூசாரியாக சத்தியேந்திர தாஸ் இருந்து வருகிறார். அப்போது பாபர் மசூதி இடிக்கப்படவில்லை. ராமர் ஜென்ம பூமியாக அது இருந்து வந்தது. சர்ச்சைகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. இவர் தலைமைப் பூசாரியான சில மாதங்களில், அதாவது டிசம்பர் மாதம்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் கோவில் திறக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே, சத்தியேந்திர தாஸின் கடிதத்திற்கு விஸ்வ இந்து பரிஷத் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா கூறுகையில், யாருக்கு வேண்டுமானாலும் அவர் ஆசி வழங்கலாம். ஆனால் அதற்கு முன்பு ராகுல்காந்தியின் கட்சி ராமர் கோவில் விவகாரத்தில் எப்படி நடந்து கொண்டது என்பதை அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்.

இவர்கள்தான் ராமர் பாலத்தை இடிக்க முயன்றவர்கள்.  ராமர் இருக்கிறாரா என்று கிண்டலடித்தவர்கள்.  அதையெல்லாம் ஆச்சார்யா நினைத்துப் பார்த்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால் தனது ஆசிர்வாதத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை, அரசியலும் இல்லை என்று சத்தியேந்திர தாஸ் திட்டவட்டமாக கூறி விட்டார்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்