சென்னை: நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூசக பதிவு இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
ராஜமெளலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக உருவெடுத்தவர் தான் நடிகர் பிரபாஸ். அப்படத்தில் நடித்த அனுஷ்காவிற்கும் பிரபாசுக்கும் காதல் என்றும், அவர்கள் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் பரவி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த பிரபாஸ், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று விளக்கம் அளித்தார். அதன் பின்னர் பிரபாஸ் நடித்த படங்கள் ஏதுவும் ஓடவில்லை. இந்நிலையில்,கடந்தாண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த சலார் படம் மூலம் கம்பேக் கொடுத்தார்.
தற்பொழுது, நாக் அஸ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பொருட்செலவில் உருவாகி வரும் கல்கி 2829ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தாயாராகிறதாம் இப்படம். இதில் வில்லனாக கமலஹாசன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் அமிதாப்ச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட முக்கிய முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டீசர் மேலும் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி ரிலீசாக உள்ளதாக தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.
இந்நிலையில், நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில், டார்லிங்... இறுதியாக, மிகவும் சிறப்பு வாய்ந்த ஒருவர் நம் வாழ்க்கையில் நுழைய உள்ளார்... காத்திருங்கள் வெயிட் செய்யண்டி. என்று பதிவிட்டுள்ளார். பிரபாசின் இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் யாரை இவர் டார்லிங் என்று சொல்லுகிறார். திருமணத்திற்கு பெண்ணு பார்த்து விட்டாரா? அல்லது கல்கி படத்தின் பிரமோசனுக்கு தான் இந்த பதிவா என பல கோணத்தில் இணைய பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}