பாகுபலி அனிமேஷன்.. உணர்ச்சிகளை வெளிப்படுத்த ரொம்பக் கஷ்டப்பட்டேன்.. நினைவுகூர்ந்த வசந்தி!

Jun 07, 2024,04:05 PM IST

சென்னை: பாகுபலி கிரவுன் ஆஃப் பிளட் அனிமேஷன் தொடரில், சிவகாமியின் சக்தி வாய்ந்த ஆளுமை மற்றும் அவரது கதாபாத்திரத்தில் இணைந்த வலுவான உணர்ச்சிகளை வெளிப்படுத்த நான் மிகவும் கடினமாக உழைத்தேன். இது மிகவும் சவாலாக இருந்தது என டப்பிங் ஆர்டிஸ்ட் வசந்தி உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.


கடந்த  2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில்  பிரபாஸ், ராணா நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் பாகுபலி  படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. இப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து பாகுபலி பார்ட் 2 கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இப்படமும் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்தது.




பாகுபலி படத்தின் முன் கதையாக, பாகுபலியும் பல்வாள் தேவனும் மகிழ்மதியின் மாபெரும் ராஜ்ஜியத்தையும்  சிம்மாசனத்தையும் பாதுகாக்க, அதற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலான பலரும் அறிந்திராத போர் வீரன் ரத்த தேவனுக்கு எதிராக கைகோர்க்கும் அனிமேஷன் கதையாக உருவாகியுள்ளதாம். இதற்கு பாகுபலி கிரவுன் ஆஃப் பிளட் என பெயிரிடப்பட்டுள்ளது. இது வெப் சீரிஸாக வருகின்ற 17ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. முன்னதாக இந்த வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியாகும் பல்வேறு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


கிராபிக் இந்தியா மற்றும் ஆர்கா மீடியா ஒர்க் தயாரிப்பில், பாகுபலி கிரவுன் ஆப் பிளட் அனிமேஷன் தொடரை ஜீவன் ஜே காங் மற்றும் நவீன் ஜான் ஆகியோர் இயக்கி தயாரித்துள்ளனர். இந்த வெப் சீரிஸை ராஜமவுலி மற்றும் ஷரத் தேவராஜன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.




இந்த நிலையில் பாகுபலி பிரான்சைஸியை சேர்ந்த சிவகாமி போன்ற ஒரு தனித்துவமான கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்வது என்பது  சவாலாக இருக்கும். இந்த கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசிய கலைஞர் வசந்தி இதுகுறித்து விவரித்துள்ளார்:


சிவகாமியை சித்தரிப்பதற்கான எனது அணுகுமுறை அவரது பின்னணி, உறவுகள் மற்றும் சவால்களைப் புரிந்துகொள்வதை உள்ளடக்கியது. இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது, சிவகாமியின் சக்தி வாய்ந்த ஆளுமை மற்றும் அவரது கதாபாத்திரத்துடன் இணைந்த வலுவான உணர்ச்சிகளை வெளிப்படுத்த நான் மிகவும் கடினமாக உழைத்தேன். அவளுடைய வலிமை, உறுதிப்பாடு மற்றும் நெகிழ்ச்சி ஆகியவற்றை உடல் ரீதியாகவும் குரல் ரீதியாகவும் வெளிப்படுத்துவதில் நான் கவனம் செலுத்தினேன். 




பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் தயார்படுத்தல்களுக்குப் பிறகே, சிவகாமியை உண்மையாக உயிர்ப்பித்து, அவரது அரச இருப்பையும், கட்டளையிடும் அதிகாரத்தையும் குரலில் படம்பிடிப்பது எனக்குச் சாத்தியமானது  என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

அதிகம் பார்க்கும் செய்திகள்