இறுதிக்கட்டத்தை எட்டிய பேபி & பேபி.. விரைவில் டீசர்.. குடும்பங்கள் கொண்டாடப் போகும் படமாம்!

Apr 23, 2024,02:12 PM IST

சென்னை: அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் சத்யராஜ், ஜெய், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம்  பேபி & பேபி. இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து ரசிக்கும் படங்களின் எண்ணிக்கை சமீபகாலமாக குறைந்துவிட்டது. அந்த குறையை போக்குவதற்காகவே இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர். அந்த வகையில் குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. காமெடியும், எமோஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரதாப். 




இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கிறார். நடிகர் சத்யராஜ் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாளைய தீர்ப்பு படத்தில், விஜய்யின் முதல் ஜோடியாகவும், பவித்ரா படத்தில் அஜித்தின் ஜோடியாகவும் நடித்த, நடிகை கீர்த்தனா செல்வகுமார் இப்படத்தில் ஜெய்யின் அம்மாவாகவும், நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாகவும்  நடித்துள்ளார். 


நடிகை பிரக்யா நாக்ரா ஜெய் ஜோடியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக புதுமுகம் சாய் தன்யா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, சிங்கம்புலி, நிழல்கள் ரவி, கேபிஒய் ராமர், கேபிஒய் தங்கதுரை, ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், சேசு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில்  படமாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டு வருகிறதாம்.




ஜிபிஎஸ் கிரியேசன்ஸ் சார்பில் ஜி.பி.செல்வகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். டி.பி. சாரதி ஒளிப்பதிவு செய்கிறார். யுவராஜ் பிலிம்ஸ் சார்பில்  பி.யுவராஜ், தயாரிப்பாளர் ஜி.பி. செல்வகுமார் இணைந்து  இப்படத்தை வெளியிடுகிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்