கல்யாணம் எப்ப பார்ட்னர்.. கொக்கி போட்ட ஆரி அர்ஜூனன்.. தெறித்து ஓடிய பாலாஜி முருகதாஸ்!

Jul 26, 2023,09:11 AM IST
சென்னை: நடிகர் ஆரி அர்ஜூனனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதற்காக வாழ்த்துத் தெரிவித்துள்ளார் பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ். இந்த வாழ்த்தைப் பார்த்து விட்டு பதிலுக்கு ஆரி அர்ஜூனன் ஒரு கேள்வி கேட்க, அதற்கு பாலாஜி முருகதாஸ் கொடுத்த பதில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் ஹவுஸில் மறக்க முடியாத சீசன் என்றால் அது 1 மற்றும் 4 தான். முதல் சீசனில் ஓவியா வெளுத்து வாங்கினார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் பிக் பாஸ் பக்கம் திரும்ப வைத்தவர் ஓவியாதான். அதேபோல 4வது சீசன் மிகப் பெரிய சண்டைக்காடாக மாறி தமிழ்நாட்டையே அதிர வைத்தது.



பாலாஜி முருகதாஸ் மற்றும் ஆரி அர்ஜூனன் இடையிலான சண்டையும், அது தொடர்பான வாதங்கள், விவாதங்களும் மறக்க முடியாதவை. இந்த சீசனில் ஆரி அர்ஜூனுக்கு அத்தனை ஆதரவு கிடைத்தது. அதற்கு சமமாக பாலாஜி முருகதாஸும் வெறுப்பை வாரிக் குவித்தார். கடும் போட்டியைக் கொடுத்த இருவரும் இறுதிச் சுற்று வரை வந்தனர். அதில் ஆரி பட்டம் வென்றார்.

உண்மையில் இந்த 4வது சுற்றில்தான் அனல் அதிகமாக பறந்தது. ஆரியும், பாலாவும் ஒரு சினிமாப் படம் போல இந்த ஷோவைக் கொண்டு சென்றனர். ஒரு பக்கம் ஆரி அமைதியாக வாதிட்டால்.. மறுபக்கம் பாலாஜி ஆக்ரோஷம் காட்டுவார்.. இருவருக்கும் இடையிலான வாதங்கள், சண்டைகள், மோதல்கள், உரையாடல்கள் எல்லாமே பிக் பாஸ் வீட்டின் எபிக் அங்கமாக மாறியுள்ளன. இருவருக்கும் சம அளவிலான ஆதரவும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.



இப்படி எதிரும்புதிருமாக சண்டை போட்டுக் கொண்ட இந்த இருவரும் மீண்டும் ஒரு உரையாடலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இது செம ஜாலியானது.. கொஞ்சம் கூட சண்டை இல்லாதது.. கலகலப்பானதாக அமைந்துள்ளது பலரையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

ஆரிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பாக அவர் ஒரு டிவீட் போட்டு உலகுக்கு தகவல் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இந்த சந்தோஷச் செய்திக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த சந்தோஷச் செய்திக்கு ஓடோடி வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பாலாஜி.

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வாழ்த்துகள் பார்ட்னர் என்று குறிப்பிட்டிருந்தார். அதைப் பார்த்த ஆரி ரசிகர்கள், அடடே இது நம்ம பாலாவா இப்பயாச்சும் எங்க ஆரியைப் புரிஞ்சுக்கிட்டீங்களே என்று கலாய்த்தும், நன்றி சொல்லியும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும் பதிலளித்து வருகின்றனர்.



பாலாஜியின் டிவீட்டைப் பார்த்த ஆரி, எப்ப கல்யாணம் பார்ட்னர் என்று பதிலுக்குக் கொக்கியைப் போட்டுள்ளார். இதை எதிர்பார்க்காத பாலாஜி, அதெல்லாம் பெரிய டாஸ்க் பார்ட்னர், வாழ்க்கைங்கிறது ரியாலிட்டி ஷோ இல்லை என்று கலகலப்பான பதிலைக் கொடுத்துள்ளார். இதைக் கேட்ட ஆரி, நன்றி பார்ட்னர் என்று அவருக்கு தேங்க்ஸ் சொல்லியுள்ளார்.

இருவரின் இந்த கலகலப்பான உரையாடல் டிவிட்டரில் வைரலாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்

news

செட்டிநாட்டு அடுப்படி.. காரசாரமான நான் வெஜ் சுவையில்.. அசத்தலான பலாக்காய் பிரட்டல்!

news

சோஷியல் மீடியா சமையல்ங்கிறது.. பார்க்குறப்போ ஆஹா... பண்ணி முடிச்ச அப்புறம் ஆத்தா!

news

மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை

news

ஆதிக்கம் செலுத்தும் ஏஐ.. மனிதர்களுக்கு இடையிலான உரையாடல்கள் குறைய ஆரம்பித்து விட்டதா?

news

தொகுதி மறுவரையறை.. அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!

news

Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்

news

தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்