குற்றாலம்: குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் உள்ள அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது. இதனால், கோடை காலத்திலும் குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குற்றாலத்தில் குவிந்தனர். மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தற்பொழுது அதிகரித்துள்ளது.
கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில் அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக குற்றால அருவிகளில் மக்கள் கூட்டம் சற்று அதிகரித்தே உள்ளது. கடந்த சில நாட்களாக அருவிகளில் நீர் வரத்து வந்ததால் இங்கு சுற்றுலா பயணிகள் காலை முதலே அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குற்றாலத்தில் திடீர் என வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இந்த காட்டாற்று வெள்ளத்தில், அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் பலியானார். இதன் காரணமாக குற்றால அருவிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி தொடர்ந்து இப்பகுதிகளில் மழை பெய்து வருவதினால், ஐந்தறிவி பகுதியில் அபாய ஒலி எழுப்பப்பட்டு குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
தொடர் கனமழையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால ஐந்து அருவிகளில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}