தக்காளி எதுக்கு.. நாங்க தக்காளி லாரியையே தூக்குவோம்ல!

Jul 23, 2023,03:37 PM IST
பெங்களூரு : பெங்களூருவில் தக்காளி ஏற்றி சென்ற லாரியையே பிளான் பண்ணி கடத்தி சென்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கடத்திய தக்காளியின் மதிப்பு ரூ.2.5 லட்சம் ஆகும்.

ஷிவன்னா என்ற விவசாயி ஜூலை 08 ம் தேதி சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரில் இருந்து தக்காளிகளை ஏற்றிக் கொண்டு கோலார் மார்கெட்டிற்கு சென்றுள்ளார். லாரி, சிக்கஜலா பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது பாஸ்கரன் - சிந்துஜா தம்பதி, ராக்கி மற்றும் குமார் என்பவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு லாரியை வழி மறித்துள்ளனர். தாங்கள் வந்த வாகனம் பழுதடைந்து விட்டதால் தங்களை லாரியில் ஏற்றிக் கொள்ளுமாறு ஷிவன்னாவை கேட்டுள்ளனர்.




லாரியில் ஏறியதும் நான்கு பேரும் ஷிவன்னாவை மிரட்டி, அவரை பாதி வழியிலேயே லாரியில் இருந்து தள்ளி விட்டு விட்டு, தக்காளி லாரியை தமிழகத்தின் வாணியம்பாடி பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். தக்காளி லோடுடன் இருந்த லாரியைப் பறி கொடுத்து தவித்துப் போன ஷிவன்னா அளித்த புகாரின் பேரில் போலீசார் தக்காளி ஏற்றி வந்த லாரியை கண்டுபிடித்து விட்டனர். தலைமறைவாக இருக்கும் பாஸ்கரன் மற்றும் சிந்துஜா, அவர்களுடன் வந்த இரண்டு பேரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று பாஸ்கரன் மற்றும் சிந்துஜாவை போலீசார் கைது செய்து, அவர்கள் மீது திருட்டு மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் மார்கெட்டில் தக்காளி விலை தாறுமாறாக ஏறி உள்ளது. கிட்டதட்ட ஒரு மாதமாக தக்காளி விலை உச்சத்திலேயே உள்ளது. விலைச்சல் சரிந்ததால் தக்காளி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. தக்காளி அதிக விலைக்கு விற்கும் காரணத்தால் இவர்கள் தக்காளியை லாரியை கடத்தி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்