இப்படியே வரியா பிடுங்குனா எப்படிண்ணே?..  'வொய் பிளட் சேம் பிளட்' வாசித்த டிவிட்டர் வாசிகள்!

Jul 21, 2023,09:42 AM IST
- பூஜா

டெல்லி: பாதி சம்பளத்தை அரசு கிட்ட வரியா கொடுக்கத்தான் நான் தினமும் 12 மணி நேரம் வேலை பாக்குறேனா..  டிவிட்டரில் புலம்பிய ஒரு இளைஞரின் வரிகள்தான் இது.. இப்போது இது பலராலும் ரீட்வீட் செய்யப்பட்டு வருகிறது.

பெங்களூருவை சேர்ந்த சஞ்சீட் கோயல் 'ஃப்ளிப்கார்ட்' நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். அவரோட சம்பளத்தில் சுமார் 50 சதவிதம் வரியாக அரசுக்கு எப்படி செல்கிறது என்பது பற்றி விலாவாரியாக விளக்கி அவர் 2 டிவீட் போட்டார்.. அவவளவுதான்.. நெட்டிஸன்கள் திரண்டு வந்து அதை விவாத மேடையாக்கி அவர்களும் கூடச் சேர்ந்து புலம்ப ஆரம்பிக்க.. ஒரே களேபரமாக கலகலப்பாக போய்க் கொண்டிருக்கிறது.



ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்யும் அவர் இதுகுறித்து போட்ட டிவீட்டில், இன்று நான் ரூ 5000 சம்பாதித்தேன். அதில் 30 % அரசுக்கு வரியாக போய் விடும். சரி ஏதாவது குடிக்கலாமே என்று போனால், அதற்கு 28 % வரி கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆக மொத்தம் எனது சம்பாத்தியத்தில் பாதியை நான் வரியாகவே கட்ட வேண்டியுள்ளது. இதற்காக நான் 12 மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கு என்று புலம்பியிருந்தார்.

இது பரவாயில்லை.. இதை விட ஸ்பெஷல் ஐட்டம் அவரது அடுத்த டிவீட்டில் இருந்தது.. அதில், 
இரண்டாவது ட்வீடில் ஒரு இருபது ரூபாய் 'சாக்கோ பார்' வாங்கும் போது கூட அதில் எப்படி தோராயமாக 5 ரூபாய் (சுமார் 27 %) வரியாக கரைந்து விடுகிறது என்று கூறியுள்ளார்.

பலரும் இவரது வலியை நாங்களும் ஃபீல் பண்றோம்னு சொல்லிட்டு அவங்களோட கருத்துக்கள பதிவு செஞ்சிட்டு வராங்க. ஒரு ஐஸ்கிரீம் வாங்கும் போது கூட 18% வரியில உருகி போகுது னு ஒருத்தர் சொல்ல நடுத்தர குடும்பத்தின் நிலைமையே இது தான், வரி கட்ட தான் வாழுறோம்ங்ற நிலை அப்டின்னு இன்னொருவர் கூறியுள்ளார். 

இந்நிலையில் சிலர் எதிர் தரப்பிலும் வாதித்து உள்ளனர். 30 % வரிங்கிறது வருஷம் 10 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கும் ஆட்களுக்கு தான். மற்ற நாடுகளை விட இந்தியா இந்த விஷயத்தில் எவ்வளவோ மேல் என்றும் டிரிங்ஸ்குக்குப் பதில் இளநீர் வாங்கி குடிங்க, வரியே கிடையாது என்றும் கூறியுள்ளனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் ஒரு ரோட்டு கடை இல்லனா குழந்தைகள் 'டே கேர்' வைங்க, வரியில்லா வருமானம் வரும் வழி அப்டின்னு அட்வைஸ் குடுத்து இருக்காங்க. 

அவர் அப்படியே இன்னொரு டிவீட்டும் போட்டிருந்தார். அதில், 2024 தேர்தலுக்குள் எதையெல்லாம் சரி செய்யணும்னு நான் நினைக்கிறேன்னா.. வரிகள், இலவசங்கள்,  எரிபொருள் விலை,  நல்ல சுகாதாரம்,  சுவாசிக்க சுத்தமான காற்று, ஊழல் என்று ஒரு பட்டியல் போட்டு கேட்டுள்ளார்.

நீங்க என்ன நினைக்கறீங்க பாஸ்...?

சமீபத்திய செய்திகள்

news

முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!

news

தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?

news

விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!

news

Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?

news

நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

ஓம்கார ஹரியே .. ஒம் ஒம்ஹரியே கோவிந்தஹரியே .. கோவர்த்தனம் சுமந்த ஹரி நீ!

news

பேரின்பப் பெருவாழ்வு பெற்று உய்க... தேவாரத் தலங்களின் விளக்கமும், செல்லும் வழிகளும்!

news

நவதானிய லட்டு.. கர்ப்பிணிப் பெண்களுக்கு சூப்பரான உணவு.. ரத்தம் ஊறுமாம்!

news

சுண்டலான்னு.. கிண்டலா கேட்காதீங்க பாஸ் .. புரதங்களின் அரசன்.. குழந்தைகளின் சிறந்த snacks!

அதிகம் பார்க்கும் செய்திகள்