முத்திப் போன ரீல்ஸ் பைத்தியம்.. அப்பாவை சாக்கு மூட்டையில் கட்டி 'கொரியர்' செய்ய முயன்ற பெண்!

Mar 18, 2026,08:43 PM IST

பெங்களூரு: சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் பார்வைகளைப் பெறுவதற்காக இளைஞர்கள் செய்யும் விபரீதச் செயல்கள் நாளுக்கு நாள் பைத்தியக்காரத்தனமாக மாறி வருகின்றன. பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த செயல் தற்போது இணையத்தில் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.


வடிவேலு நடித்த ஒரு படத்தில் ஒரு காட்சி வரும். அதில் வரும் சிங்கமுத்து தனது குடும்பத்தை கூரியரில் வைத்து அனுப்ப முயல்வார். அதேபோல செய்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண். 


பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கொரியர் அலுவலகத்திற்கு வந்த ஒரு இளம்பெண், ஒரு பெரிய சாக்கு மூட்டையை பார்சல் செய்ய வேண்டும் என்று அங்கிருந்த ஊழியர்களிடம் கூறியுள்ளார். அந்த மூட்டை அசையவே, சந்தேகமடைந்த ஊழியர்கள் அதனைத் திறந்து பார்த்தனர்.




அப்போது அந்த மூட்டைக்குள் ஒரு முதியவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில், அவர் அந்தப் பெண்ணின் தந்தை என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த கூரியர் நிறுவனத்தினர் என்னம்மா இது என்று பெண்ணிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் அளித்த பதில்தான் ஹைலைட்டே..!


இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காகவும், யாரையாவது கொரியர் மூலம் அனுப்ப முடியுமா? என்று சோதனை செய்து பார்க்கவுமே தனது தந்தையையே சாக்கு மூட்டைக்குள் வைத்து அந்தப் பெண் கொண்டு வந்தாராம். கடுப்பாகிப் போன ஊழியர்கள் முதல்ல பெரியவரை வெளியே எடுங்க என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த பெண்ணும், அவருடன் வந்தவர்களும், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 


நாங்கள் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு எடுத்து வந்திருக்கிறோம், இந்த பார்சலை ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்?  என்று கேட்டு அவர்கள் வாதிட்டது அங்கிருந்தவர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது சாதா லூசு இல்லை.. சரியாகாத லூசு போல என்று முடிவு செய்த அவர்கள், சமயோஜிதமாக பேசி அவர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.


இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபலமாவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்களா? என்றும், பெற்ற தந்தை என்றும் பாராமல் இப்படிச் செய்வது மனிதநேயமற்ற செயல் என்றும் நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

news

இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

news

அன்பென்றாலே அப்பா

அதிகம் பார்க்கும் செய்திகள்