சசிகலா, இளவரசியை கைது செய்ய பெங்களூரு கோர்ட் உத்தரவு

Sep 05, 2023,09:55 AM IST
பெங்களூரு : தொடர்ந்து நேரில் ஆஜராகாமல் இருந்து வந்ததால் சசிகலா மற்றும் இளவரசியை கைது செய்ய பெங்களூரு கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருடன் அவரது உறவினரான இளவரசியும் அடைக்கப்பட்டிருந்தார்.



சிறையில் இருந்த போது சொகுசு வசதிகளை பெறுவதற்காக சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் பெரும் பரப்பாக பேசப்பட்டு, சிறைத்துறை அதிகாரிகள் பலரும் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

தற்போது சசிகலா, இளவரசி ஆகியோர் ஜாமினில் வெளியே இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா மற்றும் இளவரசிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர்கள் ஆஜராவதை தவிர்த்து வந்தனர். இதனையடுத்து சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, அவர்களுக்கு ஜாமின் கையெழுத்திட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கின் அடுத்த விசாரைண அக்டோபர் 05 ம் தேதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்