டெல்லி: 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வங்கதேச அணி அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவிற்கு பயணம் செய்ய மறுத்ததால், அந்த அணி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2026 டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கூட்டாக நடைபெற உள்ளது. இதில் வங்கதேச அணி தனது லீக் போட்டிகளில் மூன்றை கொல்கத்தாவிலும், ஒன்றை மும்பையிலும் விளையாட வேண்டியிருந்தது. ஆனால், இந்தியாவில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி, தங்கள் போட்டிகளை மட்டும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது.

வங்கதேசத்தின் இந்தக் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நிராகரித்தது. இந்தியாவில் வீரர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பு அறிக்கைகள் தெரிவிப்பதாக ஐசிசி கூறியது. மேலும், இந்தியாவிற்கு வந்து விளையாட சம்மதமா? என்று வங்கதேசத்திற்கு 24 மணிநேரக் கெடு விதித்தது.
வங்கதேச அரசு மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், வீரர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது, இந்தியாவுக்குச் சென்று விளையாட மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தனர். குறிப்பாக, ஐபிஎல் தொடரிலிருந்து முஸ்தஃபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டது மற்றும் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் சூழலை முன்வைத்து இந்த முடிவை எடுத்தனர்.
வங்கதேசம் தனது முடிவை மாற்றிக்கொள்ளாததால், ஐசிசி இன்று வங்கதேசத்தை தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான் முடிவும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
வங்கதேசம் நீக்கப்படுவதால், தரவரிசை அடிப்படையில் அந்த இடத்திற்கு ஸ்காட்லாந்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாம். ஸ்காட்லாந்து அணி 'குரூப் சி' (Group C) பிரிவில் சேர்க்கப்படும். அப்பிரிவில், இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}