சென்னை: தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் மொத்தம் பத்து நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 30 நாட்கள் உள்ளன. இந்த 30 நாட்களில் எத்தனை நாட்கள் விடுமுறை விடப்படும் என்ற விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வங்கிகள் விடுமுறை என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்டு காணப்படும். இந்த வேறுபாடு எதனால் என்றால், அந்த அந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பாரம்பரிய விழாக்கள் பொருத்து மாறுபட்டு வருகிறது.
இந்த நிதி ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 14 நாட்கள் விடுமுறை என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் - 1 வருட கணக்கு நிறைவு நாள் என்பதால், இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று செயல்படாது.

ஏப்ரல் - 10ம் தேதி மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் - 14ம் தேதி தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் - 18ம் தேதி புனித வெள்ளி
ஏப்ரல் 6, 12, 23, 20, 26, 27 ஆகிய தேதிகள் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுகிழமைகள் வருவதால் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 10 நாட்களிலும் வங்கிகளின் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து திட்டமிட்டு உங்கள் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}