புதுடில்லி: ஆபாசக் காட்சிகளை ஓளிபரப்பி வந்த 18 ஒடிடி தளங்களை முடக்கி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒடிடி தளங்கள் சமீபகாலமாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. இதன் வளர்ச்சி காரணமாக பல படங்கள் நேரடியாக ஒடிடி தளங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஒடிடி தளங்களுக்கு சென்சார் இல்லாததினால் அதிகளவில் வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் இடம் பெற்று வருதாக தகவல்கள் பரவியன. இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையை யாரும் பொருட்படுத்தாத நிலையில், தற்பொழுது நடவடிக்கை தொடங்கியுள்ளது.
ஆபாச காட்சிகள் அடங்கிய படங்களை எச்சரிக்கையை மீறி தொடர்ந்து ஒளிபரப்பி வந்த ஓடிடி வலைத்தளங்கள், செயலிகள், சமூக வலைத்தள கணக்குகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தம் 18 ஒடிடி தளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் டிரீம் பிலிம்ஸ், வூவி, யெஸ்மா, அன்கட் ஆடா, ட்ரை ஃபிளிக்ஸ், எக்ஸ் பிரைம், நியான் எக்ஸ், விஜபி பேஷரம்ஸ், ஹன்டர்ஸ், ரேபிட் எக்ஸ்ட்ராமூட், நியூஃப்லிக்ஸ், மூட்எக்ஸ், மொஜிப்பிலிஸ், ஹாட் ஜாட்ஸ் விஜபி உள்ளிட்டவைகளும், 10 செயலிகள், 57 வலைத்தள பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் முகநூல் பக்கத்தில் 12 கணக்குகள், இன்ஸ்டாகராம் பக்கத்தில் 17 கணக்குகள், எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் 16 கணக்குகள், யூடியூபில் 12 கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டள்ளது. முடக்கப்பட்ட ஒடிடி தளங்களில் ஒரு ஓடிடி செயலியை ஒரு கோடி பேரும், 2 ஓடிடி செயலிகளை 50 லட்சத்திற்கு அதிகமானோரும் கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த ஓடிடி தளங்கள் வலைத்தளங்களில் முகநூல், இன்ஸ்டாகிராம் , எக்ஸ் மற்றும் youtube பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட சமூக வலைதளங்களை மட்டும் 32 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்ந்து வருகின்றனர்.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}