சென்னை: பிக் பாஸ் வீட்டில் முதல் வார எலிமினேஷனாக அனன்யா வெளியேற்றப்பட்ட தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார் எழுத்தாளர் பவா செல்லதுரை.
இந்த வருட பிக்பாஸ் சீசன் 7 வித்தியாசமாக ஆரம்பித்தது. சும்மாவே வீடு இரண்டாகும்.. வீடே இரண்டு ஆச்சுன்னா என்ன நடக்கும் ..என்பது போன்ற ஸ்லோகன்களுடன் படு பில்டப்புடன் ஆரம்பித்த 7வது சீசனில் ஆரம்பத்திலிருந்தே ரணகளம்தான்.

பிக் பாஸ் சீசன் 7னில் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் உள்ளன. பிக் பாஸ் வீட்டிற்குள் பல நிபந்தனைகள் வரையறுக்ககப்பட்டது. சந்திரமுகி போல அந்த தெக்கால ரூம் பக்கம் யாரும் போகாதீங்க .. என்பது போல பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் small boss வீட்டிற்குள் போகக்கூடாது. smallboss வீட்டில் உள்ளவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வரக்கூடாது. பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு அனைத்து வேலையும் ஸ்மால் பாஸ் கண்டஸ்டன்டுகள் மட்டுமே செய்ய வேண்டும். அவர்கள் கேட்கும் சாப்பாட்டை சமைத்து தர வேண்டும். இந்த மாதிரி ஏகப்பட்ட நிபந்தனைகளை விதிக்கப்பட்டது.
கேப்டனை குறைவாக கவர்ந்த ஆறு போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். அதில் பவா செல்லத்துரையும் ஒருவர். ஒவ்வொரு முறையும் பிக் பாஸ்ஸில் முதல் வாரம் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவதில்லை. மெர்சி காட்டி விட்டு விடுவார்கள். 2வது வாரத்திலிருந்துதான் வெளியேற்றம் இருக்கும். ஆனால் இந்த சீசன் 7ல் முதல் வாரத்திலேயே போட்டியாளர் அனன்யா வெளியேற்றப்பட்டார். இவர் போட்டிகளில் சரிவர பங்கேற்காத காரணத்தால் வெளியேற்றப்பட்டதாக கூறினார்கள்.
ஆக்சுவலி.. நேற்று நடந்த கமல்ஹாசனுடனான சந்திப்பின்போது யாரெல்லாம் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது என்று கமல்ஹாசன் கேட்டபோது, பெரும்பாலானவர்கள் பவாவைத்தான் கை காட்டினர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், அனன்யாவை கார்டு காட்டி வெளியேற்றி விட்டார் பிக் பாஸ். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன் பவாவே கூட எதிர்பார்க்கவில்லை.

பவா செல்லதுரை ஒரு எழுத்தாளர். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இளைஞர்களுக்கு கதை சொல்லும் விதம் யாருக்கும் பிடிக்கவில்லை என அடுக்கடுக்காக குற்றம் சாட்டினர். ஆனால் பவாவின் இந்த கதை சொல்லலுக்கு வெளியில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இருப்பினும் ஹவுஸ்மேட்டுகள் பலரும் பவாவின் வயதையே குறித்துப்பிட்டுக் காட்டி பேசியது பலரையும் முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது.
இந்நிலையில் இந்த வாரமும், பவா செல்லத்துரை ஸ்மால் வீட்டிற்கு போக வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பிக் பாஸிடம் அனுமதி கேட்டார் பவா.. அதற்கான காரணத்தையும் அவர் கூறினார். அவரை சமாதானப்படுத்த முயன்றார் பிக் பாஸ். இருப்பினும் இங்கிருந்து உடனே செல்ல வேண்டும் என்று தனக்குத் தோன்றுவதாகவும், தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும் கூறினார் பவா. இதையடுத்து அவரை வீட்டிலிருந்து செல்ல அனுமதிப்பதாக கூறினார் பிக் பாஸ். இதைத் தொடர்ந்து பவா வீட்டை விட்டு வெளியேறினார்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}