மும்பை: வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர வேறு பெரிய மாற்றம் இந்தப் பட்டியலில் இல்லை.
இந்திய கிரிக்கெட் வாரியம், ஆடவர் அணிக்கான 2023-24ம் ஆண்டு சீசனுக்கான வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது வருகிற செப்டம்பர் 30ம் தேதி வரைக்குமான காலத்திற்கானது. இதில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:
கிரேட் ஏ பிளஸ் (4 வீரர்கள்)
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா
கிரேட் ஏ (6 வீரர்கள்)
ஆர். அஸ்வின், முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், கே.எல். ராகுல், சுப்மன் கில், ஹர்டிக் பாண்ட்யா.
கிரேட் பி (5 வீரர்கள்)
சூரிய குமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்ஸார் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
கிரேட் சி (15 வீரர்கள்)
ரிங்கு சிங், திலக் வர்மா, ருத்துராஜ் கெய்க்வாட், ஷர்துள் தாக்கூர், சிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ். பாரத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், ரஜத் படிதார்.
துருவ் ஜூரெல் மற்றும் சர்பிராஸ் கான்
இதுதவிர குறிப்பிட்ட காலத்தில் 3 டெஸ்ட் போட்டிகள் அல்லது 8 ஒரு நாள் போட்டிகள் அல்லது 10 டி20 போட்டிகளை விளையாடியிருந்தால், அவர்களும் கிரேட் சி பிரிவில் இடம் பெறுவார்கள். உதாரணத்திற்கு தற்போது புதிய சென்சேஷனாக மாறியுள்ள துருவ் ஜூரெல் மற்றும் சர்பிராஸ் கான் ஆகியோர் 2 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளனர். இவர்கள் தரம்சலாவில் நடைபெறவுள்ள 5வது டெஸ்ட் போட்டியில் ஆடினால், கிரேட் சி பிரிவுக்கு தகுதி பெற்று விடுவார்கள்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}