பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்

Oct 21, 2025,05:00 PM IST

கிருஷ்ணகிரி: பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை என BMRCL மெட்ரோ நிர்வாகம் கர்நாடக அரசிடம் தெரிவித்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகருக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. ஓசூரில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பெங்களூருக்கு சென்று விட முடியும். ஓசூரில் இருந்து பெங்களூருக்கு வேலை மார்க்கமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வருகின்றனர். பல்வேறு நிறுவனங்களும் உற்பத்தி ஆலைகளை ஓசூரிலும், அலுவலகங்களை பெங்களூருவிலும் அமைத்திருப்பதால் இரு நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து முக்கியம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.




இந்நிலையில், ஒசூர்- பொம்மசந்திரா வழித்தடத்தை இணைக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இத்தகைய சூழலில் தான் பெங்களூருக்கும் ஓசூருக்கும் இடையே மெட்ரோ ரயில் இணைப்பு கொண்டு வரப்படும் என கர்நாடக மாநில அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது இரு நகரங்களுக்கும் இடையினான போக்குவரத்தை எளிதாக்குவது மட்டுமின்றி, இத்திட்டம் ஓசூர் நகரத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் என்று கூறப்பட்டு வந்தது . 



இத்தகைய சூழலில் தான் பெங்களூரு மெட்ரோ நிலையம், பெங்களூர் மெட்ரோ ரயில் கழக நிர்வாகம் இரு நகரங்களுக்கு இடையிலான மெட்ரோ ரயில் திட்ட இணைப்பு குறித்த விரிவான ஆய்வு அறிக்கை நடத்தியதாகவும், தொழில்நுட்ப ரீதியிலாக இது சரிப்பட்டு வராது என அறிக்கை தந்து இருப்பதாகவும் BMRCL மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அதாவது இரண்டு மெட்ரோ ரயில் நிறுவனங்களும் வேறுபட்ட மின்சார கட்டமைப்புகளை பயன்படுத்துவதால் அவற்றை ஒருங்கிணைத்து இந்த ரயில் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

news

Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்