பெங்களுரு : பெங்களுருவில் காதல் விவகாரத்தில் ஆபாச மெசேஜ் அனுப்பிய முன்னாள் காதலை, தற்போதைய காதலுடன் சேர்ந்து கடத்திச் சென்று கொடூரமாகிய பெண் உட்பட 10 பேர் தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. காதலி விவகாரத்தில் 8-10 பேர் கொண்ட கும்பல் ஒருவரை கடத்தி சென்று தாக்கியுள்ளனர். பெங்களூருவில் நடந்த சம்பவத்தில், குஷால் என்பவர் தனது முன்னாள் காதலிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலியும், அவரது தற்போதைய காதலனும் நண்பர்களுடன் சேர்ந்து குஷாலை கடத்தி சென்று தாக்கியுள்ளனர். அவரை ஒரு தனி இடத்திற்கு அழைத்துச் சென்று ஆடைகளை களைந்து, நிர்வாணப்படுத்தி, கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அவரது அந்தரங்க உறுப்புகளிலும் காயம் ஏற்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர்.
கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக சோலாதேவனஹள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹேமந்த், யஷ்வந்த், சிவஷங்கர் மற்றும் சஷாங்க் கவுடா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் மும்பையில் வாடாலா (கிழக்கு) பகுதியில் ஜுனைத் முன்னு கான் என்ற நபர் ஷாருக் என்பவரை வாளால் வெட்டியுள்ளார். "என் பொண்ணோட நீ தூங்குறியா?" என்று கேட்டுக் கொண்டே தாக்கியுள்ளார். இந்த கொடூர தாக்குதல் கேமராவில் பதிவாகியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காவல்துறையினர் விரைந்து வந்து ஷாருக்கை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஷாருக்கின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஷாருக்கிற்கு கழுத்து, முகம், வலது கை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் மிகவும் வேகமாகவும், கொடூரமாகவும் இருந்ததால் அருகில் இருந்தவர்கள் தடுக்க முடியாமல் திகைத்து நின்றனர். சிலர் தடுக்க முயன்றும் முடியவில்லை.
பெங்களூரு மற்றும் மும்பையில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களும் காதலி விவகாரத்தில் நடந்த வன்முறையை எடுத்துக்காட்டுகிறது. இது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாதிரியான வன்முறை சம்பவங்கள் வருங்காலத்தில் நடக்காமல் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இளைஞர்கள் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?
இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
தங்கம் விலை நேற்று மட்டுமில்லங்க இன்றும் குறைவு தான்... அதுவும் சவரன் ரூ. 400 குறைவு!
{{comments.comment}}