பெங்களூரு : ஐடி நகரமான பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு ஒரு புறம், வெயிலின் கொடுமை ஒரு பக்கம் என மக்கள் மிக கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். சாப்பிட்டு விட்டு கை கழுவினால் கூட அபராதம் என சொல்லும் அளவிற்கு நிலைமை மோசம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நிலைமை மிகவும் மோசமாகி வருவதால் கொரோனா சமயத்தில் இருந்தது போல் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கல்வி நிறுவனங்கள், அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கர்நாடக அரசிற்கு சோஷியல் மீடியா மூலம் கோரிக்கைகளை குவித்து வருகின்றனர். குறிப்பாக ஐடி ஊழியர்கள், ஒர்க் ஃபிரம் ஹோமை கட்டாயம் ஆக்குங்கள் என கேட்டு கதறி வருகின்றனர். மழைக்காலம் துவங்கும் வரை வீட்டில் இருந்து வேலை செய்வதை கட்டாயம் ஆக்குங்கள் என கேட்டு வருகிறார்கள்.

பல கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடம் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன. வீட்டில் இருந்து வேலை செய்வது அரசு கட்டாயமாக்கினால், பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தயாராகி வருகின்றனர். இப்படி செய்தால் பெங்களூரு நகரில் தண்ணீரின் தேவை சற்று குறைய வாய்ப்புள்ளதாகவும் சிலர் யோசனை வழங்கி வருகின்றனர். கடந்த 30-40 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை பெங்களூரு நகரம் சந்தித்து வருவதாக பெங்களூரு வெதர்மேனும் கூறி உள்ளார்.
ஒர்க் ஃபிரம் ஹோம் கிடைத்து, பலரும் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டால் அரசுக்கு இருக்கும் நெருக்கடியும் குறையும். இதனால் அரசும் சரியாக திட்டமிடவும், நிலைமையை கையாளவும் எளிதாக இருக்கும். கொரோனா சமயத்தில் வீட்டில் இருந்த படி தானே மாணவர்கள் படித்தார்கள். குறிப்பாக ஐடி ஊழியர்கள் நாட்டின் பல மூலைகளிலும் இருந்து வேலை பார்த்தனர். இதை முறையை தயவு செய்து தற்போதைய தண்ணீர் தட்டுப்பாடு நிலைக்கும் அமல்படுத்துங்கள் என பாரபட்சம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் கேட்க துவங்கி விட்டனர்.
2023ம் ஆண்டு குறைவாக மழை பெய்ததே பெங்களூருவின் இந்த தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் என சொல்லப்படுகிறது. எல் நினோவின் பாதிப்பின் காரணமாக தான் மழை அளவு குறைந்ததாகவும், அதன் எதிரொலியாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் துவங்குவதற்கு முன்பே இந்த நிலை என்றால் இன்னும் கோடை காலம் துவங்கி விட்டால் நிலைமையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என பலரும் புலம்பி வருகின்றனர்.
இந்த ஆண்டு கோடை காலத்தில் கர்நாடகாவில் பெங்களூருவின் புறநகர் உள்ளிட்ட 7082 கிராமங்கள் மிக கடுமையான பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது வேறு பலருக்கும் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஏற்கனவே 50 சதவீதம் போர்வெல்கள் பெங்களூரு நகரில் வறண்டு விட்டதாம். நகரின் பல பகுதிகளிலும் பெரிய கேன்களை வைத்துக் கொண்டு தண்ணீர் வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை இப்போதே பார்க்க முடிகிறது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}