- பா. பானுமதி
ஆனந்த் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து சிவகாசிக்கு அருகில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்தான். கல்லூரி ஹாஸ்டலில் தங்காமல் தினமும் பஸ்ஸில் சென்று வருவதாக அவனுடைய கல்வி அமைந்தது. பேருந்து பயணம் பல அனுபவங்களை தரும் என்பதால் அவர்கள் பெற்றோரும் அதற்கு சரி என்று சொல்லிவிட்டனர். அதன்படி கல்லூரிக்கு பேருந்து பயணம் தான். விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து சிவகாசி நகர் எல்லாம் சுற்றி வந்து அந்த ஊரைப் பற்றி தெரிந்து கொள்வான். அப்போதுதான் அது நடந்தது.
அங்குள்ள மக்களின் பட்டாசு தயாரிக்கும் வாழ்க்கை அவன் மனதில் மிகப்பெரிய ரணமாக பதிந்து விட்டது. அவர்களின் தோற்றம் சில்வர் பூசிய மனிதர்களாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆகிவிட்டது. இதையே நினைத்து நினைத்து அவனுடைய கல்லூரி படிப்பும் வீணாகி அந்த கல்லூரிக்கு செல்வதையே நிறுத்தி விட்டான்.

பின்பு வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஆர்ட்ஸ் கல்லூரியில் சேர்ந்து படித்தான். அன்று முதல் ஒவ்வொரு தீபாவளிக்கும் ஒரு பட்டாசு கூட வாங்கி வைக்க மாட்டான். தன் நண்பர்களும் வெடிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுப்பான். அரசுக்கும் பல கடிதங்களை எழுதுவான் .
அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு வேறு ஏதேனும் வழி செய்ய வேண்டும் என்று குறிப்புகளுடன் மிக மிக சிறிய அளவில் வேண்டுமானால் பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கட்டும். ஆனால் ஒட்டுமொத்த மக்களும் வேறு தொழிலுக்கு மாற வேண்டும் என்று அரசுக்கு ஆலோசனைகள் எழுதிக் கொண்டே இருந்தான்.
அன்று முதல் அவன் தீபாவளி, வெடிக்காத தீபாவளியாக மாறியது.
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், சொற்பொழிவாளர். மதுரையைச் சேர்ந்தவர்)
ஆனந்தின் ஆனந்த தீபாவளி!
தென்தமிழ் தலையங்கம்: மன அழுத்தத்தை வெல்வோம் - மனநலமே மனித பலம்!
தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: டிசம்பர் 20-க்குள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்!
ரூ.100-க்கு 10 காய்கறிகள்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!
தீபாவளி பண்டிகை நாளில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தீபாவளிப் பண்டிகை: இன்று முதல் இலவச வேட்டி, சேலை விநியோகம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சிவபெருமானின் சொந்த ஊர் இதுதாங்க.. சென்னை டு ராமேஸ்வரம் ஒரு ஆன்மீகப் பயணம் (பகுதி 4)
அழாதே அனாமிகா.. ந. தீபலட்சுமியின் திரில் தொடர்!
இல்லத்தரசிகளின் உழைப்பும்.. இல்லத்தரசர்களின் அர்ப்பணிப்பும்!
{{comments.comment}}