- கவிதாயினி டாக்டர் எஸ்.மணிமேகலை, ஈரோடு
அதிகாலை இனிமை
பறவைகளின் ரீங்காரம்
அகமகிழ நாளை தொடங்கும் நேரம்
அன்பை பொழிவாள்
மகிழ்வாய் இல்லத்தரசி
அயராமல் உழைத்து
காப்பான் இல்லத்தரசன்
அடுப்படி அவளது அன்பு பேசும்
அலுவலில் அவனது மனம் பேசும்

வியர்வையை முத்தாக்கி
அலங்கரித்து விளக்கேற்றுவாள்
விடாமுயற்சி போராட்டத்தில்
சிரிக்கவும் வைப்பான்.
சேமிப்பில் கெட்டிக்காரி என்றும் இல்லத்தரசி
சிக்கனத்திற்கு பேர் கொண்டான் இல்லத்தரசன்
வேலைக்கு செல்கிறாள் வியக்கவும் வைக்கிறாள்
வேண்டா பொருட்களை வாங்கியும் சேர்க்கிறாள்
அன்பால் அரவணைப்பால் அமுதூட்டுவாள் இல்லத்தரசி
அரவணைப்பில் மயங்கி இன்புறுவான் இல்லத்தரசன்
ஊரார் பாராட்டுடன் அவரவர் பணிகள்
உலகம் போற்றிடும் அவரவர் உழைப்புகள்
பெண்ணின் பெருமைக்கும் உழைப்புக்கும் பாராட்டுகள்
துணை நிற்கும் மணாளனுக்கும் அவன் உழைப்புக்கும் வாழ்த்துகள்
இல்லறம் நடத்தும் இருவருக்கும் வாழ்த்துகள்
இனிய தேசிய குடும்ப தின நல்வாழ்த்துகள்
இல்லறம் சேர்ந்து அமைப்பது இருவரின் கடமை
இதயங்கள் இணைந்து சுமப்பது இருவரின் இனிமை
நல்வாழ்த்துக்களுடனும்.. என்றென்றும் அன்புடனும்!
(கவிதாயினி டாக்டர் எஸ் மணிமேகலை. செட்டிநாட்டை சேர்ந்த இவர் மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று ஈரோட்டில் சிறந்த அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார். மருத்துவம் தவிர்த்து ஆன்மீக சொற்பொழிவு இசை கலை ஓவியத்திறமை மற்றும் பாடும் புலமை மிக்கவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர். நமது தென் தமிழ் இணையதளத்தில் ... மணிமா .. என்ற பெயரில் செட்டிநாட்டு ரெசிபி எழுதிக் கொண்டிருக்கிறார். தனது பத்தாவது வயதில் மறைந்த கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களிடம் மதுரையில் கவிதாயினி என்ற பெயர் சூட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)
தீபாவளி பண்டிகை நாளில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தீபாவளிப் பண்டிகை: இன்று முதல் இலவச வேட்டி, சேலை விநியோகம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சிவபெருமானின் சொந்த ஊர் இதுதாங்க.. சென்னை டு ராமேஸ்வரம் ஒரு ஆன்மீகப் பயணம் (பகுதி 4)
அழாதே அனாமிகா.. ந. தீபலட்சுமியின் திரில் தொடர்!
இல்லத்தரசிகளின் உழைப்பும்.. இல்லத்தரசர்களின் அர்ப்பணிப்பும்!
வேரிலிருந்து விழுது வரை.. 3 தலைமுறைகளின் வாழ்வியல் கதை (பகுதி 1)
அடடே! கருப்பு உளுந்து வடையா? கேட்டதுமே சாப்பிடணும் போல இருக்கே!
இதயத்தில் உதயமாகி பாசத்தை அள்ளித் தரும் இல்லத்தின் இனிய நிலா!
மீண்டு வர கை கொடுத்த ஓவியம்.. என் ஆசிரியர் பணி (மினி தொடர் 2)
{{comments.comment}}