- எஸ். மஞ்சு பார்கவி
வெள்ளை உளுந்து வடையெல்லாம் சின்னப் பசங்க சமாச்சாரம் பாஸ்... உண்மையிலேயே கெத்து காட்டணும்னா அது "கருப்பு உளுந்து வடை"தான்! மொறுமொறுன்னு, சத்தான, செம்ம டேஸ்டியான கருப்பு உளுந்து வடை பண்றது எப்படின்னு பாத்துருவோம். வாங்க கிச்சனுக்குள்ள போவோம்!
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 2 (பொடிசா நறுக்கிக்கோங்க)
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி & கருவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு (ருசிக்கு ஏற்ப)
எண்ணெய் – தேவையான அளவு
இப்போ ஸ்டெப் பை ஸ்டெப்பா செய்முறையைப் பார்க்கலாம்

முதலில் நம்ம ஹீரோ கருப்பு உளுந்தை 6 முதல் 8 மணி நேரம் நல்லா தண்ணில ஊற வையுங்க. (இரவே ஊற வச்சிட்டா காலையில ஜாலியா செய்யலாம்!).
ஊறிய உளுந்தை தண்ணியை நல்லா வடிகட்டிட்டு, மிக்ஸியில போட்டு அரைங்க. தண்ணி அதிகமா ஊத்திடாதீங்க, அப்புறம் வடை சுட முடியாது, தோசைதான் ஊத்த முடியும்! வடை மாவு நல்லா கெட்டியா, நைஸா வர வரைக்கும் அரைச்சு எடுத்துக்கோங்க.
இப்போ அரைச்ச மாவை ஒரு பாத்திரத்துல மாத்தி, நறுக்கி வச்ச வெங்காயம், மிளகுத் தூள், பொடியா நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை, அப்புறம் தேவையான அளவு உப்பு... எல்லாத்தையும் போட்டு நல்லா "டிஷும் டிஷும்"னு பிசைஞ்சு கலந்துக்கோங்க.
அடுப்பில் வாணலியை வச்சு, பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊத்தி சூடாக்குங்க. எண்ணெய் காஞ்சதும், கையில லேசா தண்ணி தொட்டுட்டு, மாவை சின்ன உருண்டையா எடுத்து, தட்டி, கொதிக்கும் எண்ணெயில மெதுவா போடுங்க.
ரெண்டு பக்கமும் நல்லா வெந்து, மொறுமொறுன்னு சிவந்து வரும்போது அப்படியே அரிச்சு வெளிய எடுங்க.
அவ்வளவுதான் பாஸ்! வாசனையே ஆளைத் தூக்கும். சூடான, சுவையான, ஹெல்தியான கருப்பு உளுந்து வடை தயார்! கூடவே ஒரு சூடான டீ அல்லது தேங்காய் சட்னி வச்சு சாப்பிட்டா... ஆஹா, சொர்க்கம்டா சாமி!
வந்தது வந்துட்டீங்க.. அப்படியே நம்ம கருப்பு உளுந்தின் கெத்தான பயன்களைப் பத்தியும் தெரிஞ்சுக்குங்க.
கருப்பு உளுந்து வெறும் டேஸ்ட் மட்டுமில்ல பாஸ், உடம்புக்கு அபாரமான சத்துக்களைக் கொடுக்கிற ஒரு "சூப்பர் ஃபுட்"!
கருப்பு உளுந்துல இரும்புச்சத்தும், கால்சியமும் அள்ளியிருக்கு. குறிப்பா இடுப்பு வலி, மூட்டு வலி இருக்குறவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். எலும்புகளை சும்மா இரும்பு மாதிரி பலமாக்கும்!
தொப்பை குறையணும், செரிமானம் நல்லா நடக்கணும்னு நினைப்பவங்களுக்கு இது ரொம்ப நல்லது. மலச்சிக்கல் வரவே வராது.
உடம்புக்கு சோர்வே வராம, நாள் முழுக்க 'தட தட'னு ஓட தேவையான எனர்ஜியைக் கொடுக்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படுகிற சோர்வை நீக்கி, உடம்புக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வச்சுக்க இது ரொம்பவே உதவி பண்ணும்.
அப்புறம் என்னங்க? இன்னைக்கே கருப்பு உளுந்தை ஊற வச்சு, வடயைச் சுட்டு அசத்துங்க! சாப்பிட்டுட்டு எப்படி இருந்துச்சுன்னு மறக்காம சொல்லிட்டுப் போங்க.
(கட்டுரையாளர் எஸ். மஞ்சு பார்கவி, ஆவடி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். 2004-ஆம் ஆண்டு முதல் ஆசிரியராக பணியாற்றுகிறார். தமிழ்நாடு அரசின் டாக்டர் எஸ் ராாதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் வழங்கிய சிறந்த ஆசிரியை விருது செப்டம்பர் 2022ல் கிடைத்துள்ளது. தொழில்முறை சிறப்பு விருதினை சென்னை பட்னா ரோட்டரி கிளப், செப்டம்பர் 2023ல் வழங்கிக் கெளரவித்துள்ளது)
வேரிலிருந்து விழுது வரை.. 3 தலைமுறைகளின் வாழ்வியல் கதை (பகுதி 1)
அழாதே அனாமிகா.. ந. தீபலட்சுமியின் திரில் தொடர்!
அடடே! கருப்பு உளுந்து வடையா? கேட்டதுமே சாப்பிடணும் போல இருக்கே!
இதயத்தில் உதயமாகி பாசத்தை அள்ளித் தரும் இல்லத்தின் இனிய நிலா!
ஆனந்தக் கூத்தாடிய மனசு.. மதுரையில்!
Dr N Badhri's Drama Review: தொடுவான மனிதர்கள்
Short Story: புத்தம் புது காலை!
சிவபெருமானின் சொந்த ஊர் இதுதாங்க.. சென்னை டு ராமேஸ்வரம் ஒரு ஆன்மீகப் பயணம் (பகுதி 4)
மீண்டு வர கை கொடுத்த ஓவியம்.. என் ஆசிரியர் பணி (மினி தொடர் 2)
{{comments.comment}}