ஆனந்தக் கூத்தாடிய மனசு.. மதுரையில்!

Nov 03, 2026,02:19 PM IST
- ஜோசப் சாம்ராஜ்

மதுரை 'கவி நிலவு' குழுவில் இருந்து என் சிறுகதைக்குப் பரிசு கிடைத்ததாக குறுஞ்செய்தி வந்தது. மனசு ஆனந்தக் கூத்தாடியது. 

சிறுவயதிலேயே நூலகம் மட்டும்தான் வாழ்விடம். நூலகர் விவேகானந்தர் மறக்க முடியாத நபர். காலப்போக்கில் 
வியாழன்தோறும் ஆனந்தவிகடன் தவற விடுவதில்லை. 

விருது வாங்க, காலை 'வந்தே பாரத்' ரயில் ஏறி மதுரை வந்து இறங்கி தெப்பக்குளம் அருகில் உள்ள, நளினி மஹால் 
வந்தடைந்தேன். காலை முதல் மாலை வரை தொடர்ந்து  நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

'சிலம்பம், மரகட்டை மேல் நடந்த சிறுவர்கள், ஒயிலாட்டம், பரதநாட்டியம் மற்றும் பட்டிமன்றம், பாடல்கள் என்றும் அனைத்தும் பல்சுவை ஆக இருந்தன. புத்தக வெளியீட்டு விழாவும் நடந்தது. 





இறுதியில் 'தங்கமயில்' நிறுவனர், சிறந்த எழுத்தாளர், சமூக சேவகர்,  நல்லாசிரியர் என பலருக்கும் விருது வழங்கப்பட்டது. மனசுக்குள் மத்தாப்பு. 

ஆட்டோ பிடித்து ரயில் நிலையம் வந்தேன். ஓட்டுனர் முருகன், ரேவதியைக் கரம் பிடித்து மூன்று பெண் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க  வைப்பதாகக் கூறினார். ரயில் நிலையம் வந்து லிஃப்ட் ஏறி, மீண்டும் அதே 'வந்தே பாரத்' ஏறி அமர்ந்தேன். 

கோவில்பட்டி நிறைய எழுத்தாளர் நிறைந்த ஊர். எனக்கும் அது மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. எனை ஊக்கப்படுத்திய விருது சகோதரி மற்றும் தென்னாட்டு அரசருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே எங்கள் ஊரில் வந்து இறங்கினேன். எங்கள் ஆலயத்தில் உள்ள கோபுரம் எனை வரவேற்றது.

(த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்