- மல்லிகா செல்வராஜ்
தேசிய இல்லத்தரசிகள் தினமாம்
இன்று!
இல்லத்தின் இனிய நிலா!!
கண் என்னும் குடும்பத்தை இமையாய் காக்கும்
இதய நிலா!!
உறக்கம் தொலைந்தாலும்
உற்சாகம் பொங்க
செயல் படும் உதய நிலா!!

யாருக்கு என்னென்ன பிடிக்கும் என்று பார்த்து பார்த்து
ஆசை ஆசையாய் சமையல் செய்யும்
பாச நிலா!!
விருட்சமாக நிழல் தந்து களைப்பை போக்கும் கருணை நிலா!!
ஆதார சுருதியாய்!!
ஆனந்த அருவியாய்!!
கடந்து செல்லும்
அன்பு நிலா!!
(கவிஞர் மல்லிகா செல்வராஜ், தித்திக்கும் சத்தான கடலை மிட்டாய்க்குப் பெயர் பெற்ற கோவில்பட்டியில் வசிக்கும் பல்கலை வித்தகர். மல்லிகை மலர் போன்று வெள்ளை மனமும், மென்மை குணமும் கொண்ட மங்கை இவர்!! இயற்கையை நேசித்து, எழுத்துக்களை வாசித்து, நேசத்தை சுவாசித்து வாழும் நங்கை இவர்! இனிய இல்லத்தரசி! கவிதைகள் புனைவது, திரையிசைப் பாடலின் மெட்டிற்கு ஏற்ற சந்தங்கள் அமைத்துச் சொந்த வரிகளில் இசை படிக்கும் வல்லமை பெற்றவர்!)
வேரிலிருந்து விழுது வரை.. 3 தலைமுறைகளின் வாழ்வியல் கதை (பகுதி 1)
அழாதே அனாமிகா.. ந. தீபலட்சுமியின் திரில் தொடர்!
அடடே! கருப்பு உளுந்து வடையா? கேட்டதுமே சாப்பிடணும் போல இருக்கே!
இதயத்தில் உதயமாகி பாசத்தை அள்ளித் தரும் இல்லத்தின் இனிய நிலா!
ஆனந்தக் கூத்தாடிய மனசு.. மதுரையில்!
Dr N Badhri's Drama Review: தொடுவான மனிதர்கள்
Short Story: புத்தம் புது காலை!
சிவபெருமானின் சொந்த ஊர் இதுதாங்க.. சென்னை டு ராமேஸ்வரம் ஒரு ஆன்மீகப் பயணம் (பகுதி 4)
மீண்டு வர கை கொடுத்த ஓவியம்.. என் ஆசிரியர் பணி (மினி தொடர் 2)
{{comments.comment}}