தந்தைக்கு ஓர் மடல்.. என் தந்தையே... என் விந்தையே...!

May 09, 2026,10:39 AM IST

- பா. பானுமதி


என் தந்தையே... என் விந்தையே...


வணக்கம்

பிறந்தது முதல் பிரியம் காட்டினாய் 

பிடித்ததெல்லாம் வாங்கி கொடுத்தாய்

பிரியாமல் உடன் இருந்தாய்


கண்ணாடி வளையல் முதல் கண் கவர் வளையல்கள் பிளாஸ்டிக் முதல் பிடித்தமான அணிகலன்கள் பல சிறுவயதில் நான் புத்தி இல்லாமல் கேட்டதை எல்லாம் சக்திக்கு மீறினாலும் வாங்கி தந்தாய் தவழும் போது முதல் தத்தி நடக்கும் வரை தாங்கிக் கொண்டாய் 


பள்ளிக்கு அனுப்பிவிட்டு படிப்பு முக்கியம் என்றாய் 

கல்லூரிக்கு அனுப்பும் போது கட்டுப்பாடு சிறப்பு என்றாய் 




எத்தனையோ சொல்லிக் கொடுத்தாலும் என் விதி விளையாடியது. கல்வியில் கவனம் செலுத்தாமல் கண்டதும் காதல் கொண்டேன். படிப்பை பாதியில் விட்டு உன்னையும் தவிக்க விட்டு கண்ணீரோடு அவன் கைப்பிடித்தேன். என்ன இருந்தாலும் பெண்ணை ஏமாற்றாத ஒரே ஆண் தந்தை என்பது தாமதமாக தெரிந்து கொண்டேன்.


காலம் சுழன்றது. அவன் காதல் சிறிது காலத்தில் வற்றியது. பின் சுமைகள் என்னை சுற்றியது. கவலைகளும் பிரச்சினைகளும் கைப்பற்றியது. இன்று பேசாத ஓவியமாய் பிரச்சனைகளோடும் வாழும் காவியமாய் இல்லறத்திலே சுழன்று ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடி அனுதினமும் செத்து மடிக்கிறேன். 


ஒரு நாள் சந்தையில் உங்களை கண்டதும் காணாதது போல் சென்று விட்டேன். என்னை தொடர்ந்து நீங்கள் வந்தாலும் பார்க்காதது போல் போய் விட்டேன். உங்களைப் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை. உங்களைக் கண்டாலே கரைந்து விடுவேன். உங்கள் காலடியில் விழுந்து விடுவேன். கட்டுப்படுத்த முடியாமல் நானே கலங்கி விடுவேன் என்றுதான்..

 

ஆனால் இது முடிவல்ல. காலம் ஒரு நாள் கை கொடுக்கும். விழுந்து விட மாட்டேன். வாழ்ந்து காட்டுவேன். அப்போது வருவேன். உங்களை தேடிக் கொண்டு. அதுவரை இருப்பேன் இந்த  கடிதத்தோடு பேசிக்கொண்டு.


இப்படிக்கு மணம் வீசாத உங்கள் மகள்.


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம்.. விவாதத்திற்குப் பின் நிறைவேறியது

news

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது பெரும் ஏமாற்றம்: பாமக சௌமியா அன்புமணி பேச்சு!

news

கடன் வரம்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

news

தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்

news

நாளை ஆடி அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம் 2026 ஆகஸ்ட்...இதன் முக்கியத்துவம்

news

LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் கவனத்திற்கு: e-KYC சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை அவகாசம்

news

அபுதாபி செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலவச நுழைவு விசா

news

Seenu Ramasamy comments: பட்ஜெட் பற்றிப் பேசுங்கள்.. வாசித்தவரைப் பற்றிய விவாதம் டைம் வேஸ்ட்!

news

அருணின் மாற்றம்.. திருக்குறள் கதை!

அதிகம் பார்க்கும் செய்திகள்