நல்லதை நினைத்தால்!

Oct 08, 2026,04:11 PM IST

- பா. பானுமதி


கணவன் ராதாவும் கடற்கரையில் காலாற நடந்து கொண்டிருந்தனர். வீட்டிற்கு செல்லலாம் என்று நினைத்தபோது யாரோ ஒரு பெண்மணி குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு வேகமாக கடலை நோக்கிச் சென்றதை பார்த்தார்கள். 


தெரிந்த முகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் கடலில் நோக்கிச் செல்வது விபரீதம் உணர்ந்த கண்ணன் வேகமாக சென்று அந்தப் பெண்ணை இழுத்து வர ராதா அந்த குழந்தையை கையில் பிடித்துக் கொண்டார். அவர்கள் வீட்டில் வேலை செய்யும் கமலா தான் அவள் இருவரையும் காரில் அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். 


காரணம் கேட்டபோது கலங்கியபடியே சொன்னாள் கமலா. குடித்து குடித்தே இறந்து விட்டான் கணவன் நான் நான்கு வீட்டில் வேலை செய்து வயிற்றைக் கழுவுகிறேன். என் மகன் கமலேஷுக்கு காதும் கேட்கவில்லை வாயும் பேசவில்லை தனியே வீட்டில் விட்டு  செல்ல பயமாக இருக்கிறது. உடன் அழைத்துச் சென்றால் வேலை செய்யும் இடத்தில் யாரும் ஒத்துக் கொள்வதில்லை.


என்ன செய்வேன் அதுதான் என்று கதறினாள். பிள்ளைசெல்வம் இல்லாமல் படும் துயரம் அவர்களுக்கு தான் தெரியும் ஆனால் இந்தப் பெண் கமலாவோ...




சரி இனி எதிரில் உள்ள அவுட் ஹவுஸில் நீ தங்கிக் கொள். இந்த வீட்டில் மட்டும் வேலை செய்தால் போதும் உன் பிள்ளையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நல்ல படி விருப்பம் இருந்தால் நீ எங்களுக்கு தத்து கொடுத்து விடலாம். நீயே உன் பிள்ளையை இங்கிருந்த படி வளர்க்கலாம் என்று கூற  ஐயா என் பிள்ளை... ஒரு நல்ல பிள்ளையை பார்த்து தத்து எடுத்துக் கொள்ளுங்கள்... என்று கூற உடனே ராதா வாயை மூடிக் கொண்டு வேகமாக வாஷ்பேஷனில் வாந்தி எடுக்க... கமலா சென்று கைபிடித்து பார்த்ததும் பிள்ளையைப் பற்றி பேசியதும் உங்கள் வீட்டில் பிள்ளை சத்தம் கேட்கப் போகிறது என்று கூறினார்.


அந்த வீடு ஆனந்தத்தின் எல்லையை கண்டது நல்லது நினைத்தால்!


(பா.பானுமதி, ஆசிரியர், கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், மதுரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்