சென்னை: பழையன கழிதலும் புகுதன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப இன்று போகிப் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உழவுத் தொழிலுக்கு நன்றி செய்யும் விதமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது தை முதல் நாள் சூரியனை வணங்கி அனைத்து இல்லங்களிலும் புதுப் பானைகளில் இனிப்பு பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. தை இரண்டாம் நாள் உழவுத் தொழிலில் சிறந்து விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களின் அன்பை பகிர்ந்து கொள்ளும் நாளாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை நாளை வரவேற்பதற்காக இன்று போகிப் பண்டிகை நாடு முழுவதும் களைகட்டத் துவங்கியுள்ளது.
தமிழ் மாதத்தில் மார்கழி இறுதி நாளன்று, அதாவது பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படும். இந்நாளில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப இல்லங்கள் தோறும் வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு, தேவையில்லாத பொருட்களை வெளியேற்றுவர். அன்றைய நாள் வீடு முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வேண்டாத பொருட்கள் மற்றும் வீடுகளில் தேங்கி இருக்கும் கழிவுகளை அப்புறப்படுத்தப்பட்டு வீடுகளில் வண்ணங்கள் பூசி, அலங்காரம் செய்யப்படும்.
இப்படி வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வீட்டில் உள்ள குப்பைகளை வெளியேற்றி அந்த குப்பைகளை தீயில் இட்டு எரித்து போகி கொண்டாடுவர். இவற்றோடு நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள், பழைய பழக்க வழக்கங்கள் தீயிலிட்டு எரிவதாக ஐதீகம். வீடு எப்படி சுத்தமாகிறதோ அதே போல் நம் மனதும் தூய்மை பெறுகிறது. நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் முழுவதும் தீயில் எரிந்து நல்ல குணங்கள் நம்மை தொற்றிக் கொள்கின்றன. இதன் காரணமாகத்தான் போகிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மறுநாள் நம் உள்ள தூய்மையுடன் சிறப்பான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சென்னையிலும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆனால் காலையிலிருந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால், பெரிய அளவில் புகை மாசு ஏற்படவில்லை. சில இடங்களில் மட்டுமே மிதமான மாசு நிலவியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களும் கூட டயர் போன்ற ஆபத்தான பொருட்களை தீயிடாமல் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டு போகியைக் கொண்டாடினர்.
அனைவருக்கும் பொங்கல் பண்டிகை வாழ்த்துகள் மக்களே..!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
{{comments.comment}}