போஜ்புரி நடிகை.. பீகாரில்.. மர்மமான முறையில் தற்கொலை.. காரணம் என்ன.. போலீசார் தீவிர விசாரணை!

May 01, 2024,11:15 AM IST

பாட்னா:  போஜ்புரி நடிகை அமிர்தா பாண்டே மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


பீகார் மாநிலம் பகல்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி நடிகை அமிர்தா பாண்டே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகை அமிர்தா பாண்டே தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.


அந்த விசாரணையில், இவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் எனது வாழ்க்கை இரண்டு படகுகளில் பயணம் செய்ததால் அதில் ஒன்றை நான் மூழ்கடிப்பதன் மூலம் பயணம் எளிதானது என பதிவிட்டு இருந்தார். ஆனால் இதுவரை தற்கொலை காரணம் குறித்து போலீசாருக்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை.




இதனைத் தொடர்ந்து நடிகை அமிதா பாண்டே குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார். அப்போது அவருக்கு போதிய வேலை கிடைக்கவில்லை என்பதால், தொழிலை பற்றி கவலைப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நடிகை அமிதா பாண்டே மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.


 நடிகை அமிர்தா பாண்டே, நடிகர் போஜ்புரி நட்சத்திரம் கேசரி லால் யாதவுடன் திவானபன் படத்தில் நடித்துள்ளார்.ஹிந்தி திரைப்படங்கள், தொலைக்காட்சி, நிகழ்ச்சிகள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இவர் பரிக்ஷோத் என்ற வெப் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர்.

இவருடைய கணவர் சந்திரமணி. இவர் மும்பையில் அனிமேஷன் பொறியாளராக பணிபுரிகிறார். கடந்த ஏப்ரல் பதினெட்டாம் தேதி  சகோதரி திருமணத்தில் பங்கேற்பதற்காக அமிர்தா பாண்டே பகல்பூருக்கு சென்றார். இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த பிறகு அவரது கணவர் மட்டும் மும்பைக்குச் சென்றார். ஆனால் அமிர்தா பாண்டே மும்பைக்குச் செல்லாமல் அங்கேயே இருந்து விட்டார்.


மேலும் நடிகை அமிர்தா பாண்டே கணவருடன் எதுவும் கருத்து வேறுபாடு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றிய தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.


இதுகுறித்து மாநகர காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ ராஜ் கூறுகையில், நடிகை அமிர்தா பாண்டே தற்கொலை செய்வதற்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும்.  தனிப்படை அமைக்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்