பிக்பாஸ் 7: இந்த வாரம் நோ எலிமினேஷன்.. அதான் பவா போய்ட்டாரே!

Oct 11, 2023,05:05 PM IST


சென்னை: பிக்பாஸ் சீசன் 7 தமிழ் ஷோவில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.


பிக் பாஸ் தமிழ் 7 ஷோ தொடங்கி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் இரண்டாவது வாரத்திற்கான எலிமினேஷன் யாரும் இல்லை என்ற அறிவிப்பு  தற்போது வெளியாகியுள்ளது. 


பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இரண்டு வீடுகளுடன் வித்தியாசமான விதிமுறைகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் நடத்தப்பட்டு வருகிறது.  கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்‌ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவணவிக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர்.




இதில் முதல் வாரத்தில் அனைவரும் பவா செல்லதுரை வெளியேற்றப்படுவார் என்று கெஸ் செய்த நிலையில் அனன்யா வெளியேற்றப்பட்டார். ஆனால் யாரும்  எதிர்பாராத ஒரு சம்பவம் அடுத்த சில மணி நேரங்களில் நடைபெற்றது. அதாவது பவா செல்லதுரை தான் வெளியேற விரும்புவதாக பிக் பாஸிடம் கோரிக்கை வைத்தார். தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், சர்க்கரை நோய் இருப்பதாகவும் அவர் கூறினார்.  இதையடுத்து பவா செல்லதுரை அனுப்பி வைக்கப்பட்டு விட்டார். 


அனன்யா, பவா செல்லதுரை என 2 பேர் வெளியான காரணத்தினால் இந்த வாரம் எலிமினேசன் கிடையாது என கூறப்பட்டுள்ளது.


பிக்பாஸ் தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் அக்டோபர் 1ம் தேதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. 2017ம் ஆண்டு முதல் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  


தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என  பல மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.  பிக்பாஸ் என்றாலே பரபரப்பு, விறுவிப்பு, சலசலப்பு இவற்றிற்கு பஞ்சம் என்பதே கிடையாது. அப்படி சுறுசுறுப்பாக போய் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் இது. தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது 7வது சீசன் நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!

news

பெயரளவிலான பெயர்கள்!

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்