இறுதிக்கட்டத்தை நெருங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7.. பணப்பெட்டியுடன் வெளியேறப் போவது இவரா?

Jan 04, 2024,07:20 PM IST

சென்னை : கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பணப் பெட்டியுடன் இந்த வாரம் வெளியேற போகிற அந்த போட்டியாளர் யார் என்பது குறித்து தான் அனைவரின் எதிர்பார்ப்பும் திரும்பி உள்ளது.


பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில், கடந்த வாரம் நடைபெற்ற ticket to finale சுற்றில் வெற்றி பெற்ற விஷ்ணு, நேரடியாக பைனலுக்கு சென்று விட்டார். தற்போதும் மீதம் இருக்கும் போட்டியாளர்களில் பணப்பெட்டியுடன் வீட்டில் இருந்து வெளியேற போவது யார் என்பதை என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். யாராவது ஒருவர் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு போட்டியில் இருந்த விலகும் வரை, பெட்டியில் வைக்கப்பட்டுள்ள தொகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும்.


பிக்பாஸ் சீசன் 7 ல் ஜனவரி 02ம் தேதி நடைபெற்ற எபிசோடில் ரூ.3 லட்சத்துடன் பணப்பெட்டி வீட்டிற்குள் வைக்கப்பட்டது. பிறகு பரிசுத் தொகை ரூ.5 லட்சமாகவும், பிறகு ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. இது இன்னும் உயர்த்தப்படலாம் என போட்டியாளர்கள் காத்திருந்த நிலையில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் படிப்படியாக பெட்டியில் வைக்கப்பட்ட தொகையை ஜனவரி 03ம் தேதி காலையில் இருந்து பிக்பாஸ் குறைக்க துவங்கினார். இருந்தாலும் யாராவது ஒருவர் பணத்தை எடுத்துக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேற வேண்டும். அந்த ஒருவர் என்பது தான் இப்போதுள்ள மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.




லேட்டஸ்ட் தகவல்களின் படி, இதுவரை போட்டியாளர்கள் யாரும் பணப்பெட்டியை எடுக்க முன் வராததால் பரிசுத் தொகையை ரூ.13 லட்சமாக மீண்டும் பிக்பாஸ் உயர்த்தி வைக்க போகிறாராம். பரிசுத் தொகை உயர்த்தப்பட்டதால் அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு விசித்திரா தான் போட்டியில் இருந்து வெளியேற  போகிறாராம். ஆனால் அவர் தான் வெளியேற போகிறாரா அல்லது வழக்கம் போல் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என புதிய ட்விஸ்ட் ஏதாவது நடக்க போகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


ஆனாலும் விசித்திரா ஆரம்ப முதலே மிக திறமையாக விளையாடி வருகிறார். பிரதீபின் ரெட் கார்டு விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிறகு விசித்திராவின் மீது அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது. இருந்தாலும் போட்டியில் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் வலிமையான போட்டியாளராக இருந்து வருகிறார். ஆனாலும் தனிப்பட்ட முறையில் சக போட்டியாளர்கள் அவர் மீது நடத்தி வரும் தாக்குதல்களால் ஆடியன்ஸ் மத்தியில் விசித்திராவிற்கு ஆதரவு பெருகி உள்ளது. இதனால் ரசிகர்களின் ஆதரவுடன் அவர் பணப்பெட்டியுடன் போட்டியில் இருந்த விலக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்