ஹேப்பி பர்த் டே விஜய்...நடிகர் விஜய் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Jun 22, 2023,09:55 AM IST
சென்னை : தமிழ் சினிமாவின் பிரபலமான நட்சத்திர தம்பதிகளான எஸ்.ஏ.சந்திரசேகர் - சோபாவின் மகனான விஜய், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது இந்திய சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அடுத்து அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

நடிகர், நடன கலைஞர், பாடகர் என பல திறமைகளைக் கொண்ட விஜய் இன்று தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்காக திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியா மூலம் விஜய்க்கு தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த சமயத்தில் விஜய் பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.



* 1984 ஆம் ஆண்டு தனது 10 வது வயதில் வெற்றி என்ற படம் தான் விஜய் நடித்த முதல் படம். இதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

* தனது முதல் படத்திற்காக விஜய் வாங்கிய முதல் சம்பளம் ரூ.500. நடிகரும், தயாரிப்பாளருமான பி.எஸ். வீரப்பா இதை விஜய்க்கு அளித்தார்.

* 1985 ம் ஆண்டு நான் சிவப்பு மனிதன் படத்தில் ரஜினியுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்தார் விஜய்.

* 1992 ம் ஆண்டு தனது 18 வது வயதில் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் விஜய்.

* இந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர்.

* வெளிநாடுகளில் ரூ.50 கோடி வசூல் செய்த விஜய்யின் முதல் படம், கில்லி.

* ஷங்காய் திரைப்பட திருவிழாவில் காவல் படமும், மெல்பெர்ன் திரைப்பட விழாவில் நண்பன் படமும் திரையிடப்பட்டன. 

* 100 கோடி வசூலை கடந்த விஜய்யின் முதல் படம் துப்பாக்கி. இது ரஷ்ய திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. 

* கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த சமயத்தில் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு ரூ.100 கோடியை வசூல் செய்தது விஜய் நடித்த மாஸ்டர் படம்.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்