நாடி நரம்பு புடைக்க.. மூக்கு விடைக்க.. விறுவிறுன்னு இருக்கா.. அப்ப பிரியாணி சாப்பிட்டே ஆகணும்!

Apr 27, 2023,01:17 PM IST
- சுபா

தூரத்திலிருந்து வரும் அந்த வாசனையை நுகர்ந்ததுமே.. மூக்கெல்லாம் விர்ருன்னு ஒரு உணர்வு ஏறும்..  நாடி நரம்பெல்லாம் சும்மா ஜம்முன்னு புத்துணர்ச்சி கூடும்.. வயிறெல்லாம் கபகபன்னு தாளம் போட ஆரம்பிக்கும்.. அப்படி ஒரு "சம்பவம்" நம்ம உடம்புக்குள்ள நடக்க ஆரம்பிச்சிருச்சுன்னா.. நாம "பிரியாணி"க்கு பக்கத்துல இருக்கோம்னு அர்த்தம் அல்லது.. நமக்கு பக்கத்துல சூப்பரான சுவையான பிரியாணி ரெடியாயிட்டிருக்குன்னு அர்த்தம்.

என்னங்க கரெக்ட்தானே.. என்ன சாப்பாடு சாப்பிட்டாலும் நமக்குத் திருப்தி வராது.. ஆனால் பிரியாணின்னு ஜஸ்ட் சொன்னா போதும்.. அது தரும் சுகானுபவ உணர்வு இருக்கே சான்ஸே இல்லை பாஸ்!

பிரியாணி (briyani) தற்போது எல்லோருக்கும் விருப்ப உணவகி விட்டது. கிட்டத்தட்ட அன்றாட உணவாகி விட்டது என்று கூட  சொல்லலாம். முன்பெல்லாம் முஸ்லீம்களிடம்தான் அதிகமாக பிரியாணி புழங்கி வந்தது. ஆனால் இன்று பிரியாணி சர்வதேச உணவாகி விட்டது. எப்பப் பார்த்தாலும் பிரியாணிதானா என்று கேட்கும் அளவுக்கு சாமானியர்களின் ஜஸ்ட் லைக் தட் உணவாகவும் மாறியிருக்கிறது பிரியாணி.



தட்டு நிறைய  வகை வகையான பிரியாணி வெட்டியிருப்போம்.. ஆனால் என்றைக்காவது இந்த பிரியாணி கண்டுபிடிச்சது எவன்டா என்று யோசித்திருப்போமா.. வாங்க யோசிச்சுப் பார்ப்போம்!

பிரியாணி என்பது "பிரியன்" என்ற பராசீக மொழியிலிருந்து வந்த வார்த்தை ஆகும். இதனுடைய பொருள் வறுத்து எடுத்த உணவு என்பதாகும்.  பிரியாணி பாரசீக நாடான பெர்சியா வில்தான் முதன் முதலில் தோன்றியது. போர் வீரர்களுக்கு நல்ல உணவு அளித்தால் மட்டுமே அவர்களுக்கு உடம்புக்கு வலு கிடைக்கும், சத்து கிடைக்கும், அவர்களால் நன்றாக சண்டையிட முடியும் என்பதை மனதில் கொண்டே பிரியாணி தயாரிக்கப்பட்டது. 

அப்பொழுதெல்லாம் போர் வீரர்கள் காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடி அதனை தோல் நீக்கி கறியாக மாற்றி அவர்களிடம் உள்ள மசாலாக்களை கறியின் மேல் தடவி ஊற வைத்து, பூமிக்குள் புதைத்து விடுவார்கள். மீண்டும் விடியக்காலையில்  அரிசி மற்றும் ஊற வைத்த கறிகளுடன் சேர்த்து மூடி அதிக அழுத்தம் கொடுத்து வேக வைப்பார்கள்.. (இதுதாங்க இப்போது பிரியாணி தயாரிக்கும்போது "தம்" கொடுப்போமே.. அது) . இறைச்சி கொண்டு செய்வதனால் அதிக தூர்நாற்றம் ஏற்படும் என்பதால் பட்டை, லவங்கம், ஏலக்காய் போன்ற பொட்கள் பயன் படுத்திநார்கள். 

இப்படித்தாங்க உருவானது "தம் பிரியாணி" . இந்தியாவில் விதம் விதமான பிரியாணிகள் வந்து விட்டன. ஊருக்கு ஒரு பிரியாணி என்ற ரேஞ்சுக்கு நம்மாட்கள் வெளுத்துக் கட்டுகிறார்கள். திண்டுக்கல் தலப்பா கட்டி, ஆம்பூர் பிரியாணி,  ஹைதராபாத் பிரியாணி, காஷ்மீர் பிரியாணி, கேரளா டைப் பிரியாணி, வேலூர் பிரியாணி ஆகியவை பிரபலமான பிரியாணி வகைகளாக உள்ளன. 

இதெல்லாம் நான் வெஜ் பிரியாணி ரகங்கள்.. இது போக வெஜிடபிள் பிரியாணிகளும் ஏகப்பட்டது உள்ளன.. என்னதான் சொல்லுங்க.. பிரியாணி சாப்பிட்டாலே அது தனி சுகம்தான்.. வாய்க்கு மட்டுமல்ல.. மனசுக்கும் ஒரு கெத்து கொடுக்கும் உணவுன்னா அது பிரியாணிதான்.. என்னங்க தலை தெறிக்க ஓடறீங்க.. ஓ ஸ்விக்கில ஆர்டர் போட்ட பிரியாணி வந்திருச்சு.. ரைட்டு விடுங்க.. போய் ஒரு வெட்டு வெட்டுங்க..!

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்