BJP 2nd candidates list: மனோகர் லால் கட்டாருக்கு டிக்கெட்.. நிதின் கத்காரிக்கும் சீட் கிடைத்தது!

Mar 13, 2024,07:36 PM IST

டெல்லி: பாஜக தனது 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கத்காரி, பியூஷ் கோயல், அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஹரியானா மாநில முதல்வர் பதவியிலிருந்து விலகிய மனோகர் லால் கட்டாருக்கும் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.


மார்ச் 2ம் தேதி பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 16 மாநிலங்களைச் சேர்ந்த 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். முதல் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரின்  பெயர்கள் இடம் பெற்றிருந்தன.


இந்த நிலையில் இன்று 72 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. இதில் மூத்த தலைவர் நிதின் கத்காரியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவரது பெயர் முதல் பட்டியலில் இடம் பெறாதது வியப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.




ஹரியானா முதல்வராக இருந்து பதவி விலகிய மனோகர் லால் கட்டார் ஹரியானா மாநிலம் கர்னால் தொகுதியில் போட்டியிடவுள்ளார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிடவுள்ளார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஹிமாச்சல் பிரதேச மாநிலம் ஹமீர்புர் தொகுதியில் போட்டியிடுவார் என் அறிவிக்கப்பட்டுள்ளது.


மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் தொகுதியில் நிதின் கத்காரி போட்டியிடுகிறார். பீத் தொகுதியில் பங்கஜா முண்டே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 


பசவராஜ் பொம்மை போட்டி: முன்னாள் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கர்நாடக மாநிலம் ஹவேரி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது தலைமையிலான அரசைத்தான் வீழ்த்திதான் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆட்சியமைத்தது என்பது நினைவிருக்கலாம்.


அதேபோல முன்னாள் முதல்வரான பி.எஸ். எதியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா ஷிமோகா தொகுதியில் போட்டியிடுவார்.  தேஜஸ்வி சூர்யா  மீண்டும் பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். 

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்