எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்... ஓபிஎஸ்சிற்கு பாஜகவில் சீட் இல்லை.. என்ன பண்ணப் போறார்!

Mar 21, 2024,07:18 PM IST

சென்னை: மக்களவை தேர்தலில் ஓபிஎஸ்சுக்கு பாஜக சீட் ஒதுக்கவில்லை. சீட் ஒதுக்காமலேயே தொகுதி பங்கீடு நிறைவடைந்து விட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்ற கதையாகி விட்டது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சின் நிலை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது, அவருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து அந்த கட்சியை செயல்படுத்தியவரும் கூட. அதிமுக சார்பில் முதல்வராகவும் பதவி வகித்தவர். 




ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓபிஎஸ்சின் நிலை தலைகீழாக மாறிவிட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை எடப்பாடி எங்கு இருந்தார் என்பதே கட்சியினருக்கே தெரியாமல் இருந்தது. அப்படி இருந்தவர் இன்று கட்சியின் முதல்வர், பொதுச்செயலாளராக இருக்கிறார் என்று ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் பலர் புலம்பி வருகின்றனர்.


இந்நிலையில், 2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று கூறிவந்தார் ஓபிஎஸ். அதற்காக இறுதி வரை போராடி தேல்வியையே தழுவினார். அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை எல்லாம் ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என்று நிரந்தர தடை விதித்து கோர்ட் உத்தரவும் பிறப்பித்து விட்டது. 


சரி இது தான் இப்படி ஆகி விட்டது என்று நினைத்துக் கொண்டு பாஜகவில் கூட்டணி குறித்து பேசி வந்தார். அதுவும் தற்போது சருக்கலில் விழுந்து விட்டது. பாஜக-ஓபிஎஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பில் 3 தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்ட நிலையில், ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க பாஜக முன்வந்துள்ளதாக தகவல் வந்தது. இந்நிலையில், பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவி வரும் நிலையில் ஓபிஎஸ் அணியின் மாநில மாவட்டச் செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடத்தியது ஓரு புறம் இருக்க, மற்றொரு புறம் பாஜக கூட்டணியில் 39 தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.


இந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் உள்ளனர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள்.  இந்த நிலையில், மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிடுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாஜகவுக்கு ஆதரவு அளிப்பாரா என்பது குறித்து ஓபிஎஸ் சற்று நேரத்தில் முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்

news

திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

news

2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

news

தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்