இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்த அண்ணாமலை... பாஜக-திமுக தள்ளுமுள்ளுவால் 7 பேர் காயம்

Apr 12, 2024,12:13 PM IST
கோவை : கோவை லோக்சபா தொகுதி வேட்பாளரும், தமிழக பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததற்கு திமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல், ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் சூடுபிடித்துள்ளது. கோடை வெயிலை மிஞ்சும் அளவிற்கு அனல் பறக்கும் பிரச்சாத்தில் வேட்பாளர்களும், அவர்களின் கட்சி தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 16ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.



ஆனால் பாஜக வேட்பாளரான அண்ணாமலை, தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆவாரம்பாளையம் பகுதியில் திமுக தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் வரை காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்ததில், அண்ணாமலை மாலை 4 மணிக்கு பிரச்சாரத்தை துவங்குவதற்கு பதிலாக 3 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு தான் துவங்கி உள்ளார். இதன் காரணமாக தான் இரவு 10.45 வரை அவர் பிரச்சாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. 

தமிழகத்தில் கடந்த முறை அதிமுக.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக, இந்த முறை தனித்து களம் காண்கிறது. கோவையில் பாஜக அண்ணாமலையை எதிர்த்து அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். கோவை தொகுதியில் தான் வரலாறு காணாத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற உள்ளதாகவும், ஜூன் 04ம் தேதி தமிழகத்தில் பாஜக.,வின் ஓட்டு வங்கி அதிகரித்திருப்பதையும் அனைவரையும் காண முடியும் என்றும் அண்ணாமலை நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு

news

மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்

news

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்

news

மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!

news

அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்

news

சின்னச் சின்ன பட்டாம்பூச்சியே.. Ode to the butterfly!

news

எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது

அதிகம் பார்க்கும் செய்திகள்