தமிழ்நாடு பாஜக புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம் .. இலக்குடன் செயல்பட அண்ணாமலை வாழ்த்து

Jan 19, 2025,07:19 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் கட்டப் பட்டியலில் சில மாவட்டத் தலைவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு பாஜகவில் நிர்வாக ரீதியாக 67 மாவட்டங்கள் உள்ளன. இவற்றுக்கு புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியும், உறுப்பினர் சேர்க்கையும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த தேர்தல் தற்போது இறுதிக் கட்டமாக மாவட்டத் தலைவர்கள் தேர்வு நடந்து முடிந்துள்ளது.


அதில்  முதல் கட்டமாக சில மாவட்டங்களுக்குத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியல் வருமாறு:




திருவள்ளூர் கிழக்கு -சுந்தரம்

காஞ்சிபுரம் – ஜெகதீசன்

செங்கல்பட்டு தெற்கு – மருத்துவர் பிரவீன் குமார்

திருப்பத்தூர் – எம் தண்டாயுதபாணி

கடலூர் மேற்கு –  க.தமிழழகன்

கடலூர் கிழக்கு –  கிருஷ்ணமூர்த்தி

அரியலூர்- டாக்டர்.பரமேஸ்வரி

சேலம் – சசிகுமார்

நாமக்கல் மேற்கு – ராஜேஷ் குமார்

நாமக்கல் கிழக்கு – சரவணன்

நீலகிரி – தர்மன்

திருச்சி – ஒண்டிமுத்து

மயிலாடுதுறை – நாஞ்சில் கே.பாலு

தேனி -ராஜபாண்டியன்

சிவகங்கை – பாண்டித்துரை

திண்டுக்கல் கிழக்கு –  முத்துராமலிங்கம்

திருநெல்வேலி – முத்து பலவேசம்

தென்காசி  – ஆனந்தன் அய்யாசாமி

விருதுநகர் கிழக்கு –  பென்டகன் ஜி பாண்டுரங்கன்

கன்னியாகுமரி மேற்கு  – ஆர் டி சுரேஷ்

கன்னியாகுமரி கிழக்கு – கோப்பு குமார்


அண்ணாமலை வாழ்த்து




புதிய மாவட்டத் தலைவர்களுக்கு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  அவர்கள் மற்றும்  பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா  அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பாஜக  புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் வழிகாட்டுதலின்படி நல்லாட்சியைக் கொண்டு வரவும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நமது தமிழகத்தைக் கொண்டு செல்லவும், அயராது உழைக்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்