கள்ளச்சாராய சாவுக்கு காரணமானவங்களை.. உள்ளே தூக்கி போடுங்க.. வானதி சீனிவாசன் கடும் தாக்கு

Jun 20, 2024,02:55 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு காரணமானவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஆளுங்கட்சியினரின் ஆதரவே கள்ளச்சாய விற்பனைக்கு காரணம். தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். 


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அடுத்தடுத்து பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது. இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழக முழுவதும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 




இந்த நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தொகுதியின் உறுப்பினருமான வானதி சீனிவாசன் கள்ளக்குறிச்சி கள்ள சாராய அருந்தி உயிரிழந்தவர்கள் தொடர்பாக அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 12 உயர்ந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசின் டாஸ்மார்க் மது கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் நிலையில் அதற்கு இணையாக கள்ளச்சாராயமும் விற்கப்படுவது கள்ளக்குறிச்சி குறிச்சி சம்பவத்தில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு கள்ளக்குறிச்சியில் அந்த துயரம் நிகழ்ந்துள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு சுற்றியுள்ள மாவட்டங்களில் விற்கப்படுவது அனைவருக்கும் தெரிந்திருக்கும் போது திமுக அரசுக்கும், முதலமைச்சர் மு க ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைக்கும் மட்டும் தெரியாதது ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கு காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்.


 கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களுக்கும் ஆளுங் கட்சியினருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பில்தான் கள்ளச்சாராயம் தடையின்றி விற்கப்படுவதாக மக்கள் சொல்கிறார்கள். எனவே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுபவர்களை அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் ஆளுங்கட்சியினர் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கள்ளச்சாராயம் குடித்து இவ்வளவு பேர் உயிரிழந்த பிறகும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் உண்மையை மறைத்து திசை திருப்ப முயன்றுள்ளனர். உண்மை அம்பலமாகிவிட்டதால் வேறு வழியின்றி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நடவடிக்கையாக இருந்துவிடக் கூடாது. கள்ளக்குறிச்சியில் பத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்க காரணமானவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சம்பந்தப்பட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்