என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.. செயல்படுத்த முடியுமா?.. விஜய் குறித்து வானதி சீனிவாசன்!

Nov 04, 2024,06:10 PM IST

கோயம்பத்தூர்: கொள்கை என்பது என்ன வேண்டுமானாலும் நாம் சொல்லலாம் மற்றும் எழுதிக்கொள்ளலாம். ஆனால், செயல்படுத்த முடியுமா என்பது தான் கேள்வி என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை இன்று திறந்து வைத்தார் வானதி சீனிவாசன். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விஜய் குறித்து சீமான் சொல்லியிருக்கும் கருத்துக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இன்னொரு தலைவரின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. 




ஒவ்வொருவரும் அரசியல் கட்சி ஆரம்பித்து கொள்கைகளை சொல்லுகிறார்கள். அதனை மக்களிடம் விளக்குகின்றனர். அவர்களின் கொள்கை நிலைபாட்டிற்கு ஏற்ப நாங்கள் விமர்சனம் கொடுக்கின்றோம். இன்னொருத்தர் சொல்வதற்கு எல்லாம் நாங்கள் விளக்கம் கொடுக்க முடியாது. கொள்கை என்பது என்ன வேண்டுமானாலும் நாம் சொல்லலாம் மற்றும் எழுதிக்கொள்ளலாம். ஆனால், செயல் படுத்த முடியுமா என்பது தான் கேள்வி. எந்த அளவிற்கு அது சாத்தியப்படுகிறது என்பது தான் கேள்வி.


உதாரணத்திற்கு நீட் தேர்வை ரத்து செய்வோம் என துணை முதல்வர் சொன்னார். அந்த ரகசியம் தெரியும் எனவும் சொன்னார். ஆனால் என்னாயிற்று.. மூன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் மக்களுக்கு அந்த ரகசியம் தெரியவில்லை. இது சாத்தியம் இருக்கிறது என்பதை நாங்கள் மக்களிடம் சொல்வோம் .அரசியல் கட்சி மக்களிடம் கொடுக்கும் வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியுமா என்பதை பார்க்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் விமர்சனத்திற்கு பதில் சொல்ல வேண்டும். 


ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களிடம் கருத்து கேட்டு அதற்கு என்று அமைக்கப்பட்ட குழு அரசிடம் அறிக்கை கொடுத்திருக்கிறது. இதில் உள்ள சாதக மற்றும் பாதகங்களை ஒரு அரசியல் கட்சி யோசித்து செய்ய வேண்டும். எல்லோரும் சொல்லுகின்றார்கள் என்பதற்காக பேசக்கூடாது. விஜய் இதை எதிர்க்கிறார். அவரைப்போலவே பல கட்சியினரும் சொல்கின்றனர். மத்திய அரசு இதை எப்படி மக்களிடம் தெளிவாக சொல்கின்றது என்பதை பார்க்கலாம். விஜய் ஒரே நாடு ஒரே தேர்தல் விஷயத்தை திறந்த மனதுடன் பரிசிலீக்க வேண்டும்.


கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசிடம் ஒப்படைக்கப்படும் பொழுது ஒரு சில இடங்கள் முழுமையாக காலி செய்யாமல் இருக்கின்றன. நில உரிமையாளர்கள் அதில் இருப்பதால் பணிகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. நிலத்தை ஒப்படைக்கின்ற பொழுது முழுமையாக காலி செய்து ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை வரும் முதல்வரிடம் கேட்க இருக்கிறோம்.கடந்த முறை முதல்வரை சந்தித்த பொழுது வைக்கப்பட்ட கோரிக்கைகளை பொறுமைாக முதல்வர் கேட்டார். எங்களது கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.


மொழி சார்ந்தது, உணவு சார்ந்தது இந்த விஷயங்களில் எல்லாம் மத்திய அரசு தலையிடுவதில்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் பாஜக வின் லட்சியம். திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுவது என்பது அவரவர் விருப்பம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவரின் புகைப்படம் எப்படி இருந்தது என்பதை நாம் பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்