போபால்: கல்லூரியில் படித்து வாங்கும் பட்டங்களால் எந்த பயனும் இல்லை என்பதை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும். ஒரு பைக் பழுதுபார்க்கும் கடையை நடத்தி வாழ்க்கையில் பிழைக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ., பன்னாலால் ஷக்யா என்பவர் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள 55 மாவட்டங்களில் பிஎம் காலேஜ் ஆப் எக்ஸலன்ஸ் கல்லூரிகளை இந்தூரில் இருந்து காணொளி காட்சி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். அந்த விழாவில், குணா தொகுதி பாஜக எம்.எல்.ஏ பன்னாலால் ஷக்யா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சிலிருந்து:
நான் சொல்வதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். டிகிரியால் எந்த பயனும் இல்லை. அதற்கு பதிலாக, வாழ்வாதாரத்தை ஓட்ட ஒரு மோட்டார் சைக்கிள் பஞ்சர் பழுது பார்க்கும் கடையை திறந்து வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் இன்று பிஎம் எக்ஸலன்ஸ் கல்லூரியை திறக்கிறோம். இந்த கல்லூரி பட்டங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
மாசு மற்றும் சுற்றுச்சூழல் குறித்துக் கவலை உள்ளது. ஆனால் யாரும் பஞ்ச பூதங்களை பாதுகாக்கும் திசையில் செயல்படுவதில்லை. முதன் முதலில் மனித உடலில் ஆதாரமான பஞ்சபூதங்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். இன்று நாம் நட்ட மரங்களை எவ்வளவு காலம் பாதுகாப்போம். ஆறுகள் மற்றும் வடிகால்களில் உள்ள அரசு நிலங்களில் பரவலாக ஆக்கிரமிப்பு நடக்கிறது. பக்க விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் எதையும் சாப்பிடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் விழாவிலேயே அதுவும் கல்லூரித் திறப்பு விழாவிலேயே இதெல்லாம் வேஸ்ட் என்று பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ பேசியது பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச எதிர்க்கட்சிகள் பன்னாலாலின் பேச்சை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பெண்களுக்கு குயுக்தியான அட்வைஸ் கொடுத்தவர்:
பன்னாலால் இதுபோல பேசுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பெண்களுக்கு குயுக்தியான அட்வைஸ் கொடுத்தவர்தான் பன்னாலால். முன்பொருமுறை அவர் பேசுகையில், பெண்கள் பாய் பிரண்டு வைத்துக் கொள்ளக் கூடாது. சமூகத்திற்கு பயன் உள்ள பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அது முடியாவிட்டால் பிள்ளையே பெற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தார்.
அதேபோல விராட் கோலியின் தேசபக்தி குறித்தும் கேள்வி கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர்தான் நம்முடைய பன்னாலால் என்பது குறிப்பிடத்தக்கது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}