டெல்லி :குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு மீண்டும் பாஜகவைச் சேர்ந்தவரையே தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர், மருத்துவ காரணங்களுக்கு தனது பதவியை ராஜினாமா செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். அவரது ராஜினாமா குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியதுடன், அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்த துணை ஜனாதிபதி பதவிக்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகிது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர் ராம்நாத் தாகூர் உள்ளிட்ட பல பெயர்கள் துணை ஜனாதிபதி பதவிக்கு அடிப்பட்டது. இவர்களில் ராம்நாத் தாகூரின் பெயர் தான் அதிகமாக சொல்லப்படுகிறது. இவர் சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். அடிக்கடி நடக்கும் இவர்களின் சந்திப்புகளும், இந்த சந்திப்பிற்கு பிறகு நட்டா மற்ற எம்பி,,க்களுடன் ஆலோசனை நடத்தியதையும் வைத்து பார்க்கையில் இவரே அடுத்த துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில்,அடுத்த துணை ஜனாதிபதி பாஜக கட்சியை சேர்ந்தவராக தான் இருப்பார் என பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் ச்ட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த மாநில மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பீகாரை சேர்ந்த தாகூரை அடுத்த துணை ஜனாதிபதியாக பாஜக தலைமை நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் பணிகளை துவக்கி விட்டதாக தேர்தல் கமிஷன் ஏற்கனவே தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் துணை ஜனாதிபதி தேர்தல் தேதி உள்ளிட்ட நடைமுறைகள் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!
சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!
Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!
திருமுக்கீச்சரம் என்ற உறையூர்.. தேவாரத் திருத்தலங்கள் (2)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
{{comments.comment}}