"இது நடை கூட்டல் பயணம்".. அண்ணாமலை பாதயாத்திரை குறித்து நூதன விளக்கம்!

Aug 04, 2023,01:17 PM IST
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் "பாதயாத்திரை" எதிர்க்கட்சிகள் மத்தியில் கேலி கிண்டல்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். அதன்படி அது ராமேஸ்வரத்தில் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதைத் தொடங்கி வைத்தார். ஆனால் இந்த பாத யாத்திரை வித்தியாசமாக இருக்கிறது.



அதாவது கூடவே ஒரு அதி நவீன கேரவன் வாகனமும் செல்கிறது. அதிலும் அண்ணாமலை இடை இடையே பயணிக்கிறார். அவ்வப்போது நடக்கிறார். முழுக்க முழுக்க அவர் நடந்து செல்லவில்லை. இது பலரிடையே விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கேரவன் வாகனத்தை வைத்தும் ஏகப்பட்ட டிரோல்கள் வந்து விட்டன.

இந்த நிலையில் இதுகுறித்து ஒரு யூடியூப் சானலுக்கு கட்சியின்  மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் அளித்த பேட்டியில் வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முதல் விஷயம் இத பாதயாத்திரை இல்லை. தமிழ்நாட்டில் எல்லா இடத்துக்கும் நடந்து போனால் 234 தொகுதிகளை முடிக்க 3 வருடம் ஆகும். 

விவசாயிகள், இளைஞர்கள், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், தொழில் முக்கியத்துவம் உடைய நெசவாளர்கள் உள்ளிட்டோரை அவர் சந்திக்கிறார். சும்மா டாடா காட்டி விட்டு பப்ளிக் மீட்டிங் பேசிச் செல்லவில்லை. எனவே முழுசாக முடிக்க 3 வருடம் ஆகும்.  எங்களது நோக்கம் மக்களை சந்திக்க வேண்டும். 234 தொகுதிகளையும் கவர் செய்ய வேண்டும்.. எனவே இது நடை பயணம். அதாவது நடை கூட்டல் பயணம்.  இதை அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். 

அதை விட்டு விட்டு, அண்ணாமலை பாதயாத்திரைன்னு சொன்னாரே நடக்கலையே பஸ்ஸில் பேறாரோனா்னு சொல்லக் கூடாது என்றார் அவர்.

வித்தியாசமா இருக்கேண்ணே விளக்கம்!

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்