டெல்லி: 2 கட்டமாக இதுவரை 267 வேட்பாளர்களை அறிவித்துள்ள பாஜக மேலிடம் இதுவரை 21 சதவீத சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் மறுத்துள்ளது. மக்கள் மத்தியில் கெட்ட பெயர், கட்சிக்கு கெட்ட பெயரைத் தேடிக் கொடுத்தவர்களை இந்த முறை நீக்கியுள்ளது பாஜக.
குறிப்பாக டெல்லியில் மொத்தம் உள்ள 7 சிட்டிங் எம்.பிக்களில் ஒருவருக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மற்ற 6 பேரையும் தூக்கி விட்டது பாஜக. இதில் மூத்த தலைவர் ஹர்ஷவர்த்தனும் அடக்கம். அதேபோல டிக்கெட் கிடைக்காது என்று தெரிந்துதான் அரசியலை விட்டே போவதாக முன்பே கூறி விட்டார் கெளதம் கம்பீர். இவர்கள் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளதால் மீண்டும் சீட் தரவில்லையாம் பாஜக தலைமை.
மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துள்ளவர்களுக்கு மீண்டும் சீட் கொடுத்து, ஆப்பை எடுத்து தானே வைத்துக் கொள்ள விரும்பாததால்தான், அவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் சீட் கொடுக்காமல் நிராகரித்துள்ளதாம் பாஜக. அடிமட்ட அளவில் கிடைத்த ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில்தான் இவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டதாம். நிறுத்தினால் நிச்சயம் இவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதும் இன்னொரு காரணம்.
வேட்பாளர்கள் விஷயத்தில் கவனமாக இருந்தால்தான் 370 தொகுதிகளை பாஜகவால் தனித்து வெல்ல முடியும் என்றும் மேலிடம் கருதுகிறதாம். முதல் வேட்பாளர் பட்டியலில் 195 வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. அதில் 33 சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் தரப்படவில்லை. அதில் முக்கியமானவர்கள் பிரக்யா தாக்கூர், ரமேஷ் பிதுரி, பர்வேஷ் வெர்மா. இவர்கள் வெறுப்புப் பேச்சுகளுக்குப் பெயர் போனவர்கள் ஆவர். 2வது பட்டியலில் 30 சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}