சென்னை: பதட்டத்தில் பிதற்றுகிறார் தமிழக முதல்வர். மத்திய கல்வி அமைச்சர் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார். அத்துடன் 3 கேள்விகளை கேட்டும் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ம் அமர்வு இன்று காலை தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே திமுக எம்பிக்கள் தமிழகத்திற்கு நீதி வேண்டும் என தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால், நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது. மத்திய கல்வி அமைச்சர் உண்மைக்கு மாறான தகவலை கூறி தவறாக வழி நடத்துகிறார் என பேசினார்.
இதற்கு பதில் அளித்த தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டில் ஹிந்தி திணிக்கப்படுகிறது என தமிழ்நாட்டு மாணவர்களை தவறாக வழி நடத்தி செல்கிறது திமுக அரசு. தமிழக எம்பிக்கள் அநாகரிகமானவர்கள் என பேசினார். இதற்கு, திமுகவினர் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அநாகரிகமானவர்கள் என்ற வார்த்தையை திரும்ப பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் கடும் கண்டன ஆ,ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்தும் திமுகவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு 3 கேள்விகள்.
முதல் கேள்வி: திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் அவர்கள் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது கேள்வி: மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்?
உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?
மூன்றாம் கேள்வி: யார் அந்த சூப்பர் முதல்வர்?
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது. மு.க.ஸ்டாலின் அவர்களே. இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு
KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?
தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?
டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்
அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி
லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?
Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!
{{comments.comment}}