சென்னை: திமுக ஆட்சியில் நீதிமன்றத்திலேயே காணாமல் போன சட்டம் ஒழுங்கு என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில், நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
"திறனற்ற அறிவாலய ஆட்சி முடிய இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இருக்கிறது" என்று மக்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அந்த நிம்மதியைக் கூட நீடிக்க விடாது, தினந்தோறும் தினுசு தினுசான குற்றங்கள் நடந்து, தமிழக மக்களின் அச்சத்தை மேன்மேலும் கூட்டுகின்றன.

பட்டப்பகலில் காவலர்களும் வழக்கறிஞர்களும் சூழ்ந்திருக்கும் நீதிமன்ற வளாகத்தில் நீதியரசருக்கே பாதுகாப்பில்லாத நிலையில், பாமர மக்களுக்கு எப்படி பாதுகாப்பிருக்கும்?
ஆட்சியின் இறுதிகட்ட நாட்கள் வரை வெற்று விளம்பர அறிவிப்புகளை வெளியிடுவதில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு, சட்டம் ஒழுங்கைக் கடைக்கண் கொண்டுகூட கவனிக்காத திமுக அரசைத் தப்பித்தவறி கூட மீண்டுமொரு முறை ஆட்சி அமைக்க விடமாட்டார்கள் தமிழக மக்கள் என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}