சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்

Nov 18, 2025,03:06 PM IST

சென்னை: சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 40-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏதேனும் மிகப்பெரும் அசம்பாவிதம் நிகழும் முன்னர், உடனடியாகத் தக்க மருத்துவ மற்றும் நிவாரண நடவடிக்கைகளை எடுத்து மக்களைக் காக்க வேண்டும் எனத் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.


இதே பள்ளிப்பட்டு பகுதியில் கடந்தாண்டு கழிவு நீர் கலந்த குடிநீரால் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அதன்பின் கடந்த மாதம் 10 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதேபோல மீண்டுமொரு சம்பவம் தலைதூக்கியிருப்பது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகிறது.




கடந்த வருடம் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம், சில மாதங்களுக்கு முன் திருச்சி மாவட்டம் உறையூர் என மாவட்ட வித்தியாசமின்றித் தொடர்ந்து தமிழகத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து, அப்பாவி உயிர்கள் பலியாகி வரும் நிலையில், சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு எனும் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.


சுகாதாரமான குடிநீரைக் கூட வழங்க இயலாத நிர்வாகத் திறனற்ற ஆட்சியை நடத்திக் கொண்டு, நாடு போற்றும் நல்லாட்சி என வெற்றுப் பெருமை பேசுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாணிக் குறுக வேண்டும்! இப்படி, அப்பாவிப் பொதுமக்களின் உடல்நலத்தோடும் உயிரோடும் விளையாடும் அறிவாலயத்தின் 'மீண்டுமொரு முறை ஆட்சியைப் பிடிக்கும் கனவு' கானல் நீராகவே ஆகும்! என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீபங்கள் ஏற்றும்.. திருக்கார்த்திகை மாதத்தில்.. துளசி பூஜை வெகு விசேஷம்!

news

SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்

news

சென்னை மாநகரில் குடிநீர் உபயோகத்தை கண்காணிக்க ஸ்மார்ட் மீட்டர்.. மாநகராட்சி திட்டம்

news

திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

news

குடிநீர் விநியோகம் சரியில்லை.. மேட்டுப்பாளையத்தில் குமுறலை வெளியிட்ட குடும்பங்கள்!

news

விவசாயிகளே.. உங்களுக்கு சில நற்செய்திகள்.. வாங்க வந்து படிங்க இதை!

news

தாலி இவ்ளோ அசிங்கமா காமிச்சது சரியில்ல: இயக்குனர் கே. பாக்கியராஜ்

news

சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்

news

நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்