சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி புதைக்கும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார் என பாஜகவில் இருந்து விலகி, அதிமுக.,வில் இணைந்த தடா பெரியசாமி தடாலடியாக பேசியுள்ளார். லோக்சபா தேர்தலில் சீட் ஒதுக்காத காரணத்தால் பாஜவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் அக்கட்சி மாநில பட்டியல் இனத்தவர் அணி தலைவர் தடா பெரியசாமி.
ஒவ்வொரு அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்கள் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவது வழக்கம். அந்த வரிசையில் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த தடா பெரியசாமி, 2004இல் பாஜகவில் இணைந்தார். அப்போதிலிருந்தே பாஜகவின் மாநில பட்டியல் அணி தலைவராக செயல்பட்டு வருகிறார். இவருடைய சொந்த தொகுதி சிதம்பரம் தொகுதி.ஆனால் இவருக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு சீட் கூட ஒதுக்கவில்லை. அதற்குப் பதிலாக சிதம்பரம் தொகுதியில் பாஜக வேட்பாளரான கார்த்தியாயினி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்தார் தடா பெரியசாமி.
இந்த நிலையில் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலை உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தார் தடா பெரியசாமி. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைந்து கொண்டார்.
இது பற்றி மாநிலப் பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி கூறுகையில்,

எனக்கு மக்களவைத் தேர்தலில் சீட் கொடுக்காததால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முன்னிலையில் நான் இன்று அதிமுகவில் இணைந்தேன். என்னுடைய ஆதரவாளர்கள் விரைவில் வந்து இணைவார்கள். என்னுடைய தொகுதி சிதம்பரம் தனி தொகுதி. இந்த சிதம்பரம் பகுதியில் பட்டியல் இனத்தவர்கள் உள்ள ஏழு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நான் அதிமுக சார்பாக பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எங்கு பிரச்சாரம் செய்ய சொல்கிறார்களோ அங்கு பிரச்சாரம் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். 2004 இல் பிஜேபியில் இணைந்தேன். அப்போதிலிருந்தே இக்காட்சிக்காக உழைத்தேன். கூடுதலான நிறைய பணிகளை செய்தேன்.
சனாதன ஒழிப்பு என்ற பெயரில் திருமாவளவனை எதிர்த்து நான் பேசினேன்.அப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்கேயோ இருந்த ஒரு பெண் உறுப்பினரைக் கொண்டு வந்து போட்டியிட வைக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நினைத்தால் ஏன் வேலூர் பக்கம் பொது தொகுதியை கொடுக்கலாமே. ஏன் சிதம்பரம் தொகுதியை ஒதுக்க வேண்டும். நீங்கள் பட்டியல் இன சமுதாயத்தை அப்போ மதிக்கவில்லை. எங்களுக்கு அக்கட்சியில் அங்கீகாரம் இல்லை. இதுகுறித்து நான் அண்ணாமலையிடம் கேட்டேன்.அதற்கு அவர் இது கட்சி எடுத்த முடிவு என கூறினார். தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி புதைக்கும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார் என கடுமையாக குற்றம்சாட்டி பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அவர் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். அவர் அதிமுகவில் இணைந்து எந்த தொகுதியிலும் போட்டியிடவும் முடியாது. அதனால் தடா பெரியசாமி அதிமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}