டெல்லி: லோக்சபாவில் உரையாற்றியபோது பிளையிங் கிஸ் கொடுத்துள்ளார் ராகுல் காந்தி. பெண்கள் இருக்கும் அவையில் இதுபோல ஒரு அநாகரீகமான சம்பவம் இதுவரை நடந்ததே இல்லை என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆவேசமாக கூறியுள்ளார்.
மேலும் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இதுதொடர்பாக பாஜகவைச் சேர்ந்த பெண் எம்.பிக்கள் புகாரும் கொடுத்துள்ளனர்.
ராகுல் காந்தி இன்று லோக்சபாவில் மிகக் கடுமயைான உரையை நிகழ்த்தினார். அவரது உரையின் பாதிப் பகுதியை பாஜகவினரின் கடும் எதிர்ப்பும், முழக்கமும் ஆக்கிரமித்துக் கொண்டது. இந்த நிலையில் புதிய சர்ச்சை ஒன்றை பாஜக பெண் எம்.பிக்கள் கிளப்பியுள்ளனர். ராகுல் காந்தி தங்களைப் பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்தார் என்பதுதான் இந்த புகார்.
அந்த பிளையிங் கிஸ்ஸை அமைச்சர் ஸ்மிருதி இராணியைப் பார்த்து ராகுல் காந்தி கொடுத்தார் என்றும் பாஜக பெண் எம்.பிக்கள் குமுறல் வெளியிட்டுள்ளன். ராகுல் காந்தி பேசி விட்டுச் சென்ற பின்னர் ஸ்மிருதி இராணியே இந்த விவாகரத்தைக் கிளப்பினார். அவர் பேசுகையில், சபாநாயகர் அவர்களே நான் ஒரு ஆட்சேபனையை பதிவு செய்ய விரும்புகிறேன். எனக்கு முன்பு இங்கு பேச வாய்ப்பளிக்கப்பட்ட ஒருவர் (ராகுல் காந்தி) மிகவும் அநாகரீகமான ஒரு செய்கையை செய்துல்ளார். பெண்களை அறவே வெறுக்கும் ஒரு நபரால்தான் இதுபோல பிளையிங் கிஸ் கொடுக்க முடியும். அதுவும் பெண்கள் நிறைந்த சபையில் இவ்வாறு செய்வது கடும் கண்டனத்துக்குரியது.
இப்படிப்பட்ட ஒரு மரியாதைக்குறைவான செயலை இதுவரை நாட்டின் நாடாளுமன்றம் கண்டதே இல்லை. இந்த நாடாளுமன்றம் மூலமாக இந்த குடும்பத்தின் செயலை, யோக்கியதையை நாடு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்று ஆவேசமாக கூறினார் ஸ்மிருதி இராணி.
இதற்கு முன்பு 2018ம் ஆண்டு நடந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தின்போதும் ராகுல் காந்தி ஒரு சர்ச்சையில் சிக்கினார். உரை நிகழ்த்தி முடித்து விட்ட பிறகு நேராக பிரதமர் நரேந்திர மோடியிடம் சென்று அவரைக் கட்டிப்பிடித்து அணைத்தார். பின்னர் தனது இருக்கையில் வந்து அமர்ந்ததும் கண்ணைச் சிமிட்டி அருகே அமர்ந்திருந்த ஜோதிராதித்யா சிந்தியாவிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.
ராகுல் காந்தியின் இந்த செய்கையை பிரதமரும் சரி, பாஜகவினரும் சரி சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்படியே சமைந்து போய் விட்டனர் என்பது நினைவிருக்கலாம். தற்போது ராகுல் காந்தி பிளையிங் கிஸ் கொடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}